‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்

‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ – தொடக்கவிழாவில் ”கணினித்தமிழ் நூல் வெளியீடு – அழைப்பிதழ்

அன்புடையீர் வணக்கம்.
SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயத்தின்கீழ் மாணவர்களின் தமிழ்த் திறன்களையும் தமிழ் சார்ந்த கலைத் திறன்களையும் ஊக்குவிப்பதற்காகவும் அவற்றை அரங்கேற்றுவதற்குரிய மேடை அமைத்துத்தரவேண்டும் என்பதற்காகவும்  ‘பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம்’ என்ற ஒரு அமைப்பு தொடங்கப்படவுள்ளது.

இதன் தொடக்கவிழா 03.09.2015 வியாழக்கிழமையன்று  பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை காட்டாங்குளத்தூர் வளாகத்தில் அமைந்துள்ள முனைவர் தி.பொ. கணேசன் அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவில் விகடன் பிரசுரத்தின் வாயிலாக வெளிவந்துள்ள கணினித்தமிழ் – Tamil Computing என்ற எனது நூலும் மாண்பமை பாரிவேந்தர் அவர்களால் வெளியிடப்பட உள்ளது.
அழைப்பிதழையும் நூல் குறித்தான குறிப்புகளையும் இத்துடன் இணைத்துள்ளேன்.
உங்களோடு சேர்த்து நலாயிரம் தமிழார்வலர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.
அனைவரும் வருக.
நன்றி…

 

Paarivendar Maanavar Thamizh Mandram Invitation

Series Navigationஇசை – தமிழ் மரபு – 3மைத்தடங்கண்ணினாய்