பிசுபிசுப்பு

அருணா சுப்ரமணியன்

நகரப்பேருந்தின்
நரகப்பயணத்தில்
நரன்களிடையே
நசுங்கி நீந்தி
கரை சேரும் கணத்தில்
எட்டிப்பிடித்த கைப்பிடியில்
எவனோ தேய்த்துவைத்த பிசுபிசுப்பு
உள்ளங்கையில் ஒட்டிக்கொள்ள..
எத்தனை முறை கழுவினாலும்
நுண்கிருமிகளை கொல்லும்
வழலையால் கூட
விரட்ட முடியவில்லை – அந்த
வழவழப்பின் அருவருப்பை….

Series Navigationஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்கிளர்ச்சி : இருத்தலை எழுந்து நிற்கச் செய்கிறது. (புரட்சியாளன் நூலின் முன்னுரை)