பிணம்

Spread the love

 

 

கான்சரில்

செத்துப் போனவரின் உடல்

குளிர்

கண்ணாடிப் பெட்டிக்குள்

வைக்கப்படிருக்கும்.

 

கண்ணீரில் ’ஸ்பாஞ்சாய்’ ஆகிய மனைவி

களைத்தருகில் அமர்ந்திருப்பாள்.

 

அருகிலிருக்கும் ஒருத்தி

அடையாளம் காட்டிக் கொண்டிருப்பாள்

வந்து போவோரை.

 

செத்துப் போனவரை

இளம் வயதில் கைப்பிடிக்க

விரும்பியவள் அவள்

என்று கேள்வி.

 

சாவுக்கு வந்த சிலர்

சாவைத் தவிர

ஏதேதோ

கதை பேசிக் கொண்டிருப்பார்கள்.

 

இன்று நிகழும்

வாழ்க்கை போல்

அலங்காரமாயிருக்கும் பாடை

காத்துக் கொண்டிருக்கும்

பிணத்துக்கு.

 

 

Series Navigationநூறு கோடி மக்கள்இருள் மனங்கள்.