பின்தொடரும் சுவடுகள்

அ.டெல்பின் 

திரும்பிப் பார்த்த இடமெங்கும்,
காலடிச் சுவடுகள்,
மெலிதாயும்,நீண்டும்
பெரிதாகவும்,ஆழப் பதிந்தும்
சோர்ந்தும் ……………
இறந்த காலத்தின் முடிவுகள்
எதிர்காலத்தின்  வெளிச்சத்தை
பாதித்துத் தான் இருந்தன.
எங்கோ தொலைதூரத்தில்
மங்கலாய் ஒளிக்கீற்று
நம்பிக்கைகளை  முன்னோக்க
சுவடுகள் பின்தொடர்ந்தன .

Series Navigationஎனக்குள் தோன்றும் உலகம்முன்பதிவில்லா தொடா் பயணம்