பியூர் சினிமா புத்தக அங்காடி – விரிவாக்கம்

பியூர் சினிமா புத்தக அங்காடியில் இதுநாள் வரை முழுக்க முழுக்க சினிமா புத்தகங்களே விற்பனைக்கு இருந்து வந்தன. இப்போது சினிமாவின் உபபிரிவுகளான, அல்லது சினிமாவின் முன்னோடி கலைகளான ஓவியம், நாடகம், காமிக்ஸ் போன்ற தலைப்புகளில் வெளிவந்துள்ள புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மிக முக்கியமாக திரைப்படமாக்கப்பட்ட நாவல்கள் என்கிற தலைப்பில் எந்தெந்த நாவல் / சிறுகதையெல்லாம் திரைப்படமாக்கப்பட்டதோ அவையும் விற்பனைக்கு உள்ளன. இவைகள் அன்றி, தமிழ், ஆங்கிலம், மலையாளம், ஹிந்தி ஆகிய திரைப்படங்களின் டி.வி.டி க்களும், தேசிய திரைப்பட வளர்ச்சிக்கு கழகம் (NFDC) தயாரித்து வெளியிட்டுள்ள திரைப்பட டி.வி.டி க்களும், விற்பனைக்கு உள்ளன. சினிமா சார்ந்து என்ன வேண்டுமென்றாலும், இனி நண்பர்கள் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரியலாம். சினிமா சார்ந்த உங்கள் அணைத்து தேவைகளும் பியூர் சினிமா புத்தக அங்காடியில் நிறைவடையும் வகையில் அதனை செம்மைப்படுத்தி வருகிறோம். தொடர்ந்து உங்களது ஆதரவை எதிர்பார்க்கிறோம். இன்னமும் பியூர் சினிமா புத்தக அங்காடிக்கு வருகை புரியாத நண்பர்கள் உடனே வருகை தாருங்கள்.
பியூர் சினிமா புத்தகங்களை ஆன்லைன் மூலம் பெற: http://www.purecinemabookshop.com/index.php
முகவரி: பியூர் சினிமா புத்தக அங்காடி, எண். 7, மேற்கு சிவன் கோவில் தெரு, வடபழனி, வாசன் ஐ கேர் அருகில், விக்ரம் ஸ்டுடியோ எதிரில், டயட் இன் உணவகத்தின் இரண்டாவது மாடியில்.
 
தொலைப்பேசி: 044 42164630
Series Navigationதமிழ்மணவாளன் கவிதைகள்கவிதையாக ஒரு கதை தாத்தாக்கள் வாழும் இல்லங்கள்