பிரிவை புரிதல்…

அருணா சுப்ரமணியன்

பிரிவு ஒன்றும்
எனக்குப் புதிதில்லை…
உன்னைப் பிரிதல்
இன்னும் பழகவில்லை…

புரிதலின் ஆழம்
கற்றுத் தந்த நீ
ஏன் இன்று
பிரிவு பாடம்
தொடங்குகிறாய்??

நீர்க்குமிழி வாழ்க்கை
தானெனத் தெரிந்தும்
நிரந்தரமாக்கவே
துடிக்குது மனது…

பேதைமை தான்
என்ன செய்ய
இந்தப் பேதைக்கு
புரிவது எப்போதோ?

உன் பிரியம்
புரிந்தது போல்
உன் பிரிவும்
புரிபட வேண்டும்…

உன்மேல் கொண்ட
பிரியத்தாலே
பிரிதலும் புரிய
பிரியப்படுகிறேன் …

– அருணா சுப்ரமணியன்

நன்றி
அருணா சுப்ரமணியன்
http://thanjaimangai.blogspot.com/

Series Navigationசமுதாய அக்கறை உள்ளவை [வளவ. துரையனின் “சாமி இல்லாத கோயில்” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !