சமுதாய அக்கறை உள்ளவை [வளவ. துரையனின் “சாமி இல்லாத கோயில்” சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]

This entry is part 1 of 17 in the series 13 நவம்பர் 2016

ஆ. மீனாட்சி சுந்தரமூர்த்தி வளவ. துரையனின் படைப்புகள் எல்லாமே சமுதாய அக்கறையை வெளிப்படுத்துபவை. அவ்வகையில் இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள கதைகளும் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுகின்றன எனலாம். பல்வேறு தரப்பு மனிதர்களின் மனப்போராட்டங்களையும், வாழ்வில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்களையும் இவை நேர்மையான முறையில் பேசுகின்றன. முச்சந்திகளில், தெருவின் ஓரத்தில், மரத்தடிகளில், வானமே கூரையாகக் கொண்டு கோயில் இல்லாமலே சாமிகள் குடியிருப்பதுண்டு. நாம் பலமுறை இவற்றைக் கண்டிருக்கிறோம். ஆனால் பெரும்பாலும் சாமி சிலைகள் இல்லாமல் எந்தக் கோயிலும் இருப்பதில்லை. […]

பிரிவை புரிதல்…

This entry is part 2 of 17 in the series 13 நவம்பர் 2016

அருணா சுப்ரமணியன் பிரிவு ஒன்றும் எனக்குப் புதிதில்லை… உன்னைப் பிரிதல் இன்னும் பழகவில்லை… புரிதலின் ஆழம் கற்றுத் தந்த நீ ஏன் இன்று பிரிவு பாடம் தொடங்குகிறாய்?? நீர்க்குமிழி வாழ்க்கை தானெனத் தெரிந்தும் நிரந்தரமாக்கவே துடிக்குது மனது… பேதைமை தான் என்ன செய்ய இந்தப் பேதைக்கு புரிவது எப்போதோ? உன் பிரியம் புரிந்தது போல் உன் பிரிவும் புரிபட வேண்டும்… உன்மேல் கொண்ட பிரியத்தாலே பிரிதலும் புரிய பிரியப்படுகிறேன் … – அருணா சுப்ரமணியன் நன்றி அருணா […]

2016 நவம்பர் 14 ஆம் நாள் தெரியும் நிலா, 70 ஆண்டுக்கு ஒருமுறை வரும் பேருருவப் பெருநிலவு !

This entry is part 3 of 17 in the series 13 நவம்பர் 2016

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://www.bing.com/videos/search?q=extreme+super+moon&qpvt=Extreme+Super+Moon&FORM=VDRE +++++++++++++++ +++++++++++++++ பூமியின் உடற் சதையி லிருந்து பூத்தது  வெண்ணிலவு ! நீள் ஆரத்தில் தெரியும் சிறு நிலவு ! குறு ஆரத்தில் பெருநிலவு !  பூமித் தாயிக்குப் பரிவுடன் ஒருமுகம் காட்டி  மறுமுகம் மறைப்பது நிலவு ! அண்டையில் சுற்றிய முரண்கோள் தியா”  பண்டைப் புவியுடன் மோதி உருண்டை யாய்த்  திரண்டது நிலவு ! பூமியும் நிலவும் ஒரே ஒரு பிண்டத்திலே உண்டான உண்டைக் கட்டிகள் […]

Tamil Nadu Science Forum, Madurai District District Level 24th National Children Science Congress….

This entry is part 4 of 17 in the series 13 நவம்பர் 2016

Tamil Nadu Science Forum, Madurai District 6, Kakkaththoppu Street, Madurai-1 President:Dr.H.Shakila Secretary: K.Kamesh Treasurer: R.Vennila Coordinator:K.Malarselvi —————————————————————————————————————- Press Note: District Level 24th National Children Science Congress…. Tamil Nadu Science Forum Organized 24th National Children’s Science Congress on 12th Nov.2016 from 10 am to 4pm at Mahatma Montessori School, Baba building at Surveyor Colony, Madurai-7. The […]

ஆசாரச்சிமிழுக்குள் மலர்ந்த “புதுமைப்பிரியை” பத்மா சோமகாந்தன்

This entry is part 5 of 17 in the series 13 நவம்பர் 2016

ஆரம்ப பாடசாலை பருவத்திலிருந்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தூழியத்தில் ஈடுபடும் ஈழத்து இலக்கியவாதி முருகபூபதி – அவுஸ்திரேலியா இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை இன்றுவரையில் தீராதிருப்பதற்கு பலரும் பல காரணங்களைச்சொல்லி வருகிறார்கள். விதேசியர்கள் வந்து சூறையாட வேண்டியதையெல்லாம் அள்ளிக்கொண்டு, இனி எக்கேடும் கெட்டுப்போங்கள் என புறப்பட்டார்கள். அவர்கள் தந்த சுதந்திரம் எமது அரசியல்வாதிகளுக்கு தந்திரமானதுதான் மிச்சம். இந்தப்பின்னணியில் முதல் பிரதமராக பதவிக்கு வந்த டீ.எஸ். சேனாநாயக்கா, 1952 இல் காலிமுகத்திடலில் குதிரை சவாரிக்குச்சென்று விழுந்து இறந்ததும், அடுத்த பிரதமர் […]

தொடுவானம் 144. வென்றது முறுக்கு மீசை.

This entry is part 6 of 17 in the series 13 நவம்பர் 2016

டாக்டர் ஜி. ஜான்சன் 144. வென்றது முறுக்கு மீசை. விடுதி திரும்பியதும் சம்ருதி எனக்காக காத்திருந்தான். என்ன ஆயிற்று என்று ஆவலுடன் கேட்டான். நான் நடந்தவற்றைக் கூறினேன். அவனால் நம்பமுடியவில்லை.அன்னம்மாவா அவ்வாறு புகார் செய்தார் என்று திரும்பத் திரும்பக் கேட்டான். அவர் மிகவும் சாதுவாச்சே என்று கூறினான். அதனால்தான் என்னுடைய முறுக்கு மீசையைக் கண்டு பயந்துவிட்டார் போலும். அதோடு அவரை நான் பார்த்த பார்வை அப்படி இருந்திருக்கலாம் என்றும் கூறினேன். பரவாயில்லை, கூடுதல் வகுப்புத்தானே, அதனால் பாடத்தில் […]

தமிழ்மணவாளன் கவிதைகள்

This entry is part 7 of 17 in the series 13 நவம்பர் 2016

1 துயரத்தையப் பறவையின் காலில் கட்டிப் பறக்க விட்டேன் கண் மறையும் தூரம் கடந்தவுடன் ஆசுவாமாகிறேன் அனிச்சையாய் எனக்குத் தெரியும் உயரப் பறக்கையில் உதறிவிடும் அதை துயரத்தைப் பறக்க விடக்கூடாதென இப்போது தான் புரிகிறது நம் காலடியில் புதைத்து விட வேண்டும் பறவை சுமந்து போய் போட்ட இடத்தில் நாகவிருட்சமாகி கண்காணா இடமிருந்து காவு கேட்கிறது யாவற்றையும் 2 நேற்றைய திரைக்கதை கலந்துரையாடலில் கம்பன் ஏனோ அதிகம் இருந்தான் முடிந்த முன்னிரவில் குளத்தூர் தாண்டி வேகமாய் வந்தபோது […]

A Lecture in Remembrance of MSS Pandian 10th November 2016

This entry is part 8 of 17 in the series 13 நவம்பர் 2016

Dear Friends, We are a group of students from JNU working under the banner ‘Tamil conscience’. We are happy to invite you for a lecture in the memory of the distinguished historian and social scientist, late Prof.MSS Pandian. The lecture, titled “Divinity, Denial and the Embodied Self: Changing Perspectives on Untouchability and the Case of […]

மௌனம் பேசுமா !

This entry is part 9 of 17 in the series 13 நவம்பர் 2016

இரா.ஜெயானந்தன். மூடிக் கிடக்கும் வனங்களில்தான் எத்தனை உண்மைகள் ! அமைதியாக நெளிந்து செல்லும் செம்மண் பாம்புகள் பெரிய குடத்தை ஏந்தி செல்லும் அக்காமார் நத்தைகள் பலவண்ண படமாய் நெளியும் சின்ன அட்டை பூச்சிகள் வெளவால் குருவிகள் கொளசிக பட்சிகள் மூக்கு திரிஞ்சான்கள் தலைகீழ் விகிதங்களாய் வெளவால் குடும்பங்கள்1 செவந்தி மலரில் கால் பதிக்கும் வண்ணத்து பூச்சிகள்! பாடித் திரியும் தேனீக்கள். ஊர்வலமாய் பாடித் திரியும் ஊசித் தும்பிகள்! செவ்வாய் நாரைகள் ஓடையில் நீந்தும் களவாய் மீன்கள் சுகித்து […]

ஓர் பொழுது – இரு தேசம் – இரு புரட்சி சபாஷ் மோ(டி)ரம்ப்

This entry is part 10 of 17 in the series 13 நவம்பர் 2016

கோவிந்த் கருப் தமிழில் ஒரு பழமொழி உண்டு, உண்மை அம்மணமாகத் தான் வரும் என்று. ஆம், உலகின் இரு பெரும் ஜனநாயக தேசத்தின் இரு முதன்மை வேட்பாளர்கள் மிக மிக அதிகமாக விமர்சிக்கப்பார்கள் – வெளிப்படையாக பேசியதால். மோடி இந்தியா டிரம்ப் – யூ எஸ் ஏ இருவனும் ஏதோ உலக மகா கொடுங்கோலர்கள் போலவும், மத இன வெறி பிடித்தவர்கள் போலவும் சித்தரிக்கப்பட்டார்கள், இதில் மிக மிக கேடான நிலையெடுத்தவர்கள், தங்களை செக்யூலரிஸ்ட் என்ற தரம் […]