புத்தகப்பார்வை. லஜ்ஜா ( அவமானம்) – தஸ்லிமா நஸ்ரின்.

இரா. ஜெயானந்தன்.

taslima-dec12பங்களாதேஷ்,சுதந்திரம் அடைவதற்கு முன், இந்து-முஸ்ஸீம் விரோதப்போக்கு ஆரம்பித்து விட்டது. இது, பாபர் மசூதி இடிக்கப்பட்டபின், தீவிரமடைந்து, இந்துக்களின் உயிர்,உடைமை,கலாச்சார மையங்கள், சரித்திர புகழ் பெற்ற இந்துக் கோவில்கள், வர்த்தக மையங்கள், இந்து பெண்களை கற்பழித்தல் போன்ற செயல்கள் தலைவிரித்தாடுகின்றன. இதனை, ஒரு முஸ்ஸிம் எழுத்தாளர் பதிவு செய்து, அடர்ந்த அனுபவங்களின் வாயிலாக, தஸ்ஸிமா நஸ்ரின் நாவலாக எழுதி உள்ளார். இந்த புத்தகம் வெளி வந்தவுடன், அவரை கொல்வதற்கு அவரது நாட்டிலேயே ஒரு கும்பல் அவரை தேடியது. அவர் நாடு கடத்தப்பட்டார்.இவர், அங்கிருந்து தப்பித்து இந்தியா, அமெரிக்கா,ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்து வாழ்ந்து வருகின்றார்.

இந்த புத்தகம், இந்திய, ஐரோப்பிய, இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளிவந்துள்ளது.இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையைத் தொடர்ந்து, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து ஏராளமான இந்துக்கள், இந்தியாவிற்குள்வந்துவிட்டனர். மதத்தின் அடிப்படையில் பிரிவினை என்பதால், இந்திய எல்லைக்கதவுகள் அவர்களுக்கு திறந்தே கிடந்தன.

இந்த நாவலின் சுதாமய் போன்ற இந்துக்கள், தாங்கள் பிறந்து வளர்ந்த தாய் மண்ணை விட்டு வரமுடியாமல், அங்கு நடக்கும் அக்கிரமங்களையெல்லாம் பொறுத்துக்கொண்டும், அவரது உடைமைகளை இழந்தும் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் தலைக்கு மேல், முஸ்லீம் திவிரவாத கத்தி தொங்கிக் கொண்டு இருப்பதையும் அவர் அறிந்தவர்தான்.

.முஸ்லிம்களின் அராஜகம் நாளுக்குநாள், வளர்ந்துக்கொண்டே போன போது,பலரின் அறிவுறுத்தலின் பேரில், சுதாமய், அரண்மனை போன்ற தனது கிராமத்து வீட்டை, ஒரு முஸ்லிமுக்கு குறைந்த விலைக்கு விற்றுவிட்டு, டாக்காவில், ஒரு சிறிய வாடகை வீட்டில், குடிபுகுந்தார். அவரது மருத்து தொழிலும் பாதிக்கப்பட்டு ,வாழ்க்கையை எந்த திசையில் திருப்புவது என திரியாமல் முழித்துக் கொண்டு, காலத்தை ஒட்டுகின்றார்.

சுதாமய், ஒரு இந்துவாக இருந்ததால், அவருக்கு முறையான பதவிஉயர்வோ, சம்பள உயர்வோ கிடைக்கவில்லை.அப்படியே, எவ்வித சலுகை இல்லாமல், பணி ஒய்வும் அடைந்தார். பிறகு, வீட்டிலேயே, ஒரு சிறிய கீளினிக் ஆரம்பித்தார். ஆனால், அங்கும் சில இந்துக்களே, அவரிடம், சிகிக்சைக்கு வந்தனர்.இவரது, வளர்ந்த மகன் சுரஞ்சன், போரட்ட குணமுடன் அலைந்துக்கொண்டிருந்தான். அவனது தாய் நாடே, அவனுக்கு அந்நியமாய் போனதில், அவனுக்கு உடன்பாடு கிடையாது.

அவனுடைய நண்பர்களில் பலர், முஸ்லிமாக இருந்தாலும், நடுநிலையோடு யோசித்து, இந்துக்களுக்கு நடக்கும், அட்டூழியங்களை, கொள்கை அளவில் எதிர்த்துதான் பேசினர். சுரஞ்சனுக்கு பல வழிகளிலும் அவர்கள் உதவி செய்தனர்.

பல நேரங்களில், வன்முறை வெடிக்கும்போது, பல இந்துக் குடும்பங்களை, முஸ்லிம் இல்லங்களில் வைத்து காப்பாற்றவும் செய்தனர்.

சுரஞ்சனின் தங்கை மாயா, ஒரு முஸ்லிம் இளைஞனைத்தான் காதலித்து வந்தாள். அப்படியாவது, பிழைத்துக் கொள்ளலாம் என மாயா நினத்தாள். சுரஞ்சனுக்கு, இதில் விருப்பம் கிடையாது. ஆனாலும், அவளின் சுதந்திரத்தில் தலையிடாமல் இருந்தான்.

ஒருமுறை, ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி, பாபர் மசூதி இடிப்பை கண்டித்து, டாக்கா நகரையே சூரையாடினார்கள். பல இந்து இளம் பெண்களை மான பங்க்ம் செய்தனர். முக்கியமான இந்துக்கோவில்கள், இடித்து தள்ளினர்.

பங்களாதேசம் உருவானதே நானகு முக்கிய கொள்கைகளின் அடிப்படையில்தான். ” தேசியம், மதச்சார்பின்மை,ஜனநாயகம்மற்றும் சோசலிசம். ஆனால், நாடு சுதந்திரம் அடைந்த கொஞ்ச நாளில் அந்த தேசம், எதிர்க்கட்சியினர் வலையில் விழுந்தது.

ஆட்சி மாறியது. நாடே முஸ்லீம் நாடாக மாறியது. இந்துக்களின் மீது, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்கள் நடந்தேறிக்கொண்டே இருக்கின்றன.

1978ல்- “பிஸ்மில்லா” என்ற சொல்லை,அரசியல் அமைப்பில் சேர்க்கவேண்டும் என்று, ஒரு கும்பல் கிளம்பியது. 1988ல்- இஸ்லாம் தேசிய கீதமாக பாடவேண்டும் என இன்னொருக் கூட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இதையெல்லாம் பார்த்து, சிரஞ்சனின் ரத்தம் கொதித்தது. ஆனால் ஏதும் செய்ய முடியாமல், அறையினில் முடங்கிக்கிடந்தான்.

1965ல் நடந்த, இந்தியா- பாகிஸ்தான் போருக்கு பிறகு, பல பெரிய பணக்கார இந்துக்களை, பங்களா மூஸ்லிம் திவிரவாதிகள், வெட்டிக் குவித்தனர். அவர்களுடையசொத்தை, எதிரி சொத்துக் கணக்கில் எடுத்துக் கொண்டு, பல அரசாங்க அலுவலகங்களாக செயல்பட செய்தனர்.

சுமார் இரண்டு க்கோடி இந்துக்களுக்கு, அடிப்படை உரிமை மறுக்கப்பட்டு, வேருடன் பிடுங்கி எறியப்பட்டனர்.சுரஞ்சனின் தங்கை மாயாவை , ஒரு கும்பல் வீடு புகுந்து தூக்கி சென்றது.அவன் செய்வதறியாது தவித்தான்.

இந்தியாவில் என்ன பிரச்சனை இருந்தாலும், முஸ்லிம்கள் வாழ எந்த தடைக்கற்களும் கிடையாதே ! ஆனால், நாங்கள் வாழ, பங்களா தேசத்தில் இடமில்லையா ? இது எங்கள் தாய் மண்தானே, எங்கள் முன்னோர்கள் பிறந்து வளர்ந்த இடமும் இதுதானே ! இந்த தேசம் வளர்ச்சி அடைய,அவர்களின் பங்களிப்பும் இருக்கின்றதே என்ற கேள்விகளையெல்லாம், அவனுடைய முஸ்லிம் நண்பர்களிடம் கேட்டான் நிரஞ்சன். அவர்கள் பதில் தெரியாமல் முழித்தனர்.

கடைசிவரையில் போரடி பார்த்தனர் நிரஞ்சனின் தந்தையும், நிரஞ்சனும். அந்த மண்னைவிட்டு போகமுடியாமல் தவித்தனர். நிலைமை மிக மோசமாகிகொண்டே போனது.

இந்தியாவிற்கே போவது என்று முடிவெடுத்தார்கள் அவர்கள்.

பங்களா தேசம் அவர்களுக்கு, முஸ்லிம் பூமியாகவே தெரிந்தது. அங்கு இந்துக்களின் ரத்த ஆறு ஒடுவது ஒன்றுதான் இவர்கள் கனவில் வந்தது. அது நிஜம்கூடத்தான் என்று, தஸ்லிமா அவரது வேதனை குரலை, மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

220px-Cover_of_Book_named_Lajjaஇந்தியாவில் நடப்பதோ இந்து – முஸ்லிம் கலவரம். பங்களா தேசத்தில் நடப்பது இந்து ஒழிப்பு. பிறப்பால் முஸ்லிமான இந்நாவலாசிரியர் அங்கே பிறந்து வளர்ந்து, அங்கு நடக்கும் அநியாங்களையும்- அட்டூழியங்களையும் பதிவு செய்ய ஆரம்பித்ததில், தாய் மண்னே அவருக்கு எதிரியின் மண்ணாக போனது. பங்களாதேசத்தின் மிகப்பழமையான், வரலாற்று சிறப்புமிக்க இந்துக்களின் இடங்கள், கோவில்கள், ம்ந்திர்கள், ராமகிருஷ்ணா மடங்கள் அழிந்து போன உண்மைகளை பதிவு செதுள்ளார் இந்நூலாசிரியர். ஒரு கலாச்சாரம் அழிவின் அடையாளங்கள் புத்தகம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது.

இரா. ஜெயானந்தன்.

லஜ்ஜா ( அவமானம்).(வங்க நாவல்)
ஆசிரியர் ; தஸ்லிமா நஸ்ரின்.
கிழக்கு பதிப்பகம் .
விலை- ரூ 200/=

தமிழில்; கே.ஜி. ஜவர்லால்.

Series Navigationபுலவிப் பத்துநமன் கொண்ட நாணமும் அச்சமும்