புலரட்டும் புதுவாழ்வு

ஜெனிகாபிஷன்

 

புது இரவு புன்னகையுடன் புலரட்டும்

புது வாழ்வு நம்பிக்கையுடன் மிளிரட்டும்

புதுத்தென்றல் மனையெல்லாம் வீசட்டும்

மனமெல்லாம் சந்தோஷத்தில் மிதக்கட்டும்

 

அழகான உலகில் அமைதியாக வாழ்ந்திடவே

புலரட்டும் புதுவாழ்வு

தனிமையில் தத்தளிக்கும்

வெறுமையான வாழ்வது நீங்கியே

உன்னத உறவுகளுடனே

புலரட்டும் புதுவாழ்வு

 

இல்லாதவனும் வாழத்தான் வேண்டும்

பொல்லாத கதை பேசாமல்

மற்றோர் மனதை வதைக்காமல்

அகமகிழ்வோடு புலரட்டும் புதுவாழ்வு

 

முன்வீட்டு செய்தியினை

முகப்பு புத்தகத்தில் பார்த்திடாமல்

முகம் பார்த்து பேசியே புலரட்டும்

புதுவாழ்வு

 

மரணம் என்பது மனிதர்க்கு விதி தான்

மனச்சாட்சியினை புதைத்து விடாமல்

மனிதநேய பண்புடனே

புலரட்டும் புதுவாழ்வு

 

பத்து ரூபாய் பெரிதல்ல

பலகோடி சொத்திருக்கு

பிச்சைக்காரனிடம் பெருங்கதை பேசாது

நானும் மனிதன் தான் என்றே

புலரட்டும் புதுவாழ்வு

 

போதை எனும் அரக்கனோடு போகாமல்

ஆசை எனும் அரக்கனை

கொழுத்தும் தீயிற்கே இரையாக்கியே 

புதுமனிதர்களாக 

புலரட்டும் புதுவாழ்வு

 

கண்டொரு கதை

காணாமல் ஒரு கதை

பேசும் 

போலி உறவை கழைந்து

உன்னத உறவின் தாற்பரியம் உணர்ந்தே

உயர்ந்த வாழ்வாக 

புலரட்டும்

 புதுவாழ்வு

 

பிறப்பும் இறப்பும் இயற்கை தானே

இடையில் எதற்கு போர்க்கை மனிதா

அன்பு எனும் தீபம் ஏற்றியே

புலரட்டும் புதுவாழ்வு

 

அவசர உலகில் அவதி அவதியாக கடன் பட்டே

நம்பி வந்தவரை 

நட்டாற்றில் விட்டு விடாமல்

நல்ல எண்ணத்துடன்

நல்லவனாகவே

புலரட்டும் புதுவாழ்வு

 

மண்ணின் வரலாற்றில்

மனிதனாக மீண்டெழுந்தே

நாமும் மனிதன் தான் என்று

பார் போற்ற வாழ்ந்தே

புலரட்டும் புதுவாழ்வு

Series Navigationகவிதையும் ரசனையும்ஜேம்ஸின் மலர்ச்சாலை