பூ !
கவிதை
செடியோ மரமோ
எல்லா இலைகளும்
முதல் பூவைக் காணத்தான்
காத்திருக்கின்றன
பூ
மென்மையின் அடையாளம்
பழத்தின் முன்னறிவிப்பு
மணம் பூவின் புன்னகை
உடன்பிறப்பான இலைகள்
பூவை எப்போதும்
ஆசீர்வதித்தபடி இருக்கின்றன
பூ புக்ககம் செல்வதற்கான
எதிர்பார்ப்பு
இலைகளுக்கு அதிகமுண்டு
பெருமழையிலும்
பேய்க்காற்றிலும்
பூவின் அழுகை
மௌனமாக நிகழ்கிறது
— என்னை முழுமையாக
ஒரு பூவிடம்
ஒப்படைத்துவிடுவது
எனக்கு
எப்போதும் சம்மதம் !
----------
பின்னூட்டங்கள்