பேசாமொழி 23வது இதழ் வெளியாகிவிட்டது…

 

படிக்க: http://pesaamoli.com/index_content_23.html

நண்பர்களே, பேசாமொழி இதழில் 23வது இதழ் வெளியாகிவிட்டது. கீலோ பொண்டகார்வோவின் அருமையான நேர்காணல் ஒன்றும், அவரது ‘பேட்டில் ஆஃப் அல்ஜியர்ஸ்’ திரைப்படம் பற்றிய நேர்த்தியான கட்டுரை ஒன்றும் இந்த இதழில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் இருந்து, கே.வி.ஷைலஜா திரை இதழுக்காக மொழிபெயர்த்த இந்த கட்டுரையை நண்பர்கள் தவறாமல் படிக்க வேண்டும். கோவிந்த் நிஹ்லானி மற்றும் அவரது படங்கள் பற்றிய யமுனா ராஜேந்திரன் கட்டுரையும், லத்தீன் அமெரிக்க சினிமா பற்றிய சாரு நிவேதிதாவின் கட்டுரையும், தவறவிடக்கூடாதவை. ஓவியர் பாப்புவின் நினைவுகளை பகிர்ந்துக்கொள்ளும் ஓவியர் டிராட்ஸ்கி மருதுவின் கட்டுரை முக்கியமான ஒன்று. வெர்னர் ஹெர்சாக் பற்றிய ஆனந்தின் மொழிபெயர்ப்பு, யுகேந்தரின் வேஸ் ஆப் சீயிங் தொடர், ராஜேஷின் ஷாட் பை ஷாட் உள்ளிட்ட அனைத்து மொழியாக்க தொடர்களும், எப்போதும் போல் சிறப்பாக வெளிவந்துள்ளது.

பிலிம் நியூஸ் ஆனந்தனின் தொடர் முடியும் தருவாயில் உள்ளது. நண்பர்கள் இந்த கட்டுரை அவசியம் படிக்க வேண்டும். தவிர இலங்கை தமிழ் சினிமாவின் கதை தமிழ் சினிமாவில் இருந்து இலங்கை சினிமா எப்படி தன்னு சுவீகரித்துக்கொண்டது என்பதை விளக்குகிறது. நண்பர்களே எந்த கட்டுரையையும் சாய்ஸில் விட முடியாது. எல்லா கட்டுரைகளையும் அவசியம் படித்துவிட்டு, உங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

படிக்க: http://pesaamoli.com/index_content_23.html

 

பேசாமொழி இதழை முழுக்க முழுக்க இணையத்தில் படிக்கலாம். பேசாமொழி, அச்சில் வெளிவரும் இதழ் அல்ல.

Series Navigationசுத்த ஜாதகங்கள்அழியாச் சித்திரங்கள்