செந்நாப்போதார் திருவள்ளுவர் தாம் இயற்றிய திருக்குறளில் பலவிதமான உயிரினங்களைப் பல்வேறு இடங்களில் உவமையாகக் காட்டி உள்ளார். எந்தெந்த இடங்களில் எவ்வெவற்றை எவ்வெவ்வாறு பயன்படுத்துகிறார் என்று சொல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். யானை: வள்ளூவர் முதலில் யானையை எவ்வாறு காட்டுகிறார் என்று பார்ப்போம். திருவள்ளுவர் யானையைக் குறிக்குமிடத்து, ‘களிறு’ ’யானை’ என்றே குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் ‘பிடி’ என்று பெண் யானையைக் கூறவே இல்லை. வள்ளுவர் முதலில் காட்டும் யானை மிக மிகக் கொடியது. பாகனுக்கும் எளிதில் அடங்காதது. […]
பொங்கும் ஆசைகள் பூம்புனல் மனசுக்குள் வானமென விரிந்த கண்கள் கொண்ட ஞாபகப் பொக்கிஷங்கள் அனைத்து உணர்வுகள் சுமந்த உயிர் மூச்சுக்கள் பாசி படிந்த சங்குகள் மண் படிந்த சிப்பிகள் கடல் நுரையின் பூக்கள் நட்சத்திர மீன்கள் கண் முழிக்கும் சோழிகள் பவழப் பூங்கொத்துக்கள் உல்லாசச் சுற்றுலாவில் உன் பாதம் பட்டு நகர்ந்ததும் என் உள்ளங்கையில் சிக்கிய கூழாங்கற்கள் பட்டாம் பூச்சியின் ஒற்றை இறக்கையின் இறைவன் வரைந்த அழகோவியம் ‘குட்டிபோடும்’ நம்பிக்கையில் மயிலிறகின் ஒற்றைக்கம்பி அரச மரத்தின் காய்ந்த […]
முருகபூபதி மகா கவி சுப்பிரமணிய பாரதியாருக்கு காதலி இருந்தாளா? கவிஞர்கள் மென்மையான இயல்புள்ளவர்கள். உணர்ச்சிமயமானவர்கள். அவர்களுக்கு காதலி இல்லையாயினும் ஒருதலைப்பட்சமாகவேனும் காதல் இருந்திருக்கலாம். 1882 இல் டிசம்பர் மாதம் 11 ஆம் திகதி எட்டயபுரத்தில் சுப்பையா என்ற செல்லப்பெயரில் பிறந்தவர் 1921 செப்டெம்பர் 12 ஆம் திகதி திருவல்லிக்கேணியில் உலக மகாகவியாக மறைந்தார். 1897 இல் தனது பதினான்காவது வயதில் ஏழு வயதுச்சிறுமி செல்லம்மாவை மணந்தார். சுமார் 39 வயதுகூட நிறைவுறாத வயதில் […]
முனைவர் எச். முஹம்மது சலீம் சிங்கப்பூர் சிங்கப்பூரில் தர்காக்கள் எனப்படும் முஸ்லிம் புனிதர்களின் மறைவிடங்கள் சிங்கப்பூர் நாடு உருவாவதன் முன்பே (1819) இங்கு .இருந்துள்ளன.. சூசன் உல்ட்மன் , ஷேரன் சித்தீக் ஆகியோரின் ஆய்வுக்கட்டுரைகளில் (1993/94: 81-3) இங்கு எழுபதுக்கும் மேற்பட்ட தர்காக்கள் இருந்துவந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இங்கு முக்கியத்துவம் வாய்ந்த தர்காவாக விளங்கும் பால்மர் சாலையில் அமைந்துள்ள ஹபீப் நூஹ் தர்கா இவற்றுள் ஓன்று. .முயிஸ் எனப்படும் சிங்கப்பூரின் இஸ்லாமிய சமய மன்றம் […]
“ஓட்டல் முதலாளி அனுப்பி வெச்சாரு. இந்த லெட்டரை உன்னாண்ட குடுத்துப் பணத்தை வாங்கிட்டு வரச் சொன்னாரு….நோட்டிசு குடுக்காம திடீனு நின்னுட்டியாமே? அதான்… லெட்டர்ல எல்லாம் வெவரமா எளுதியிருக்காரு…இந்தா…” என்ற அவன் லுங்கியை உயர்த்தி அரைக்கால்சரராயிலிருந்து நான்காக மடிக்கப்பட்டிருந்த ஒரு கடிதத்தை எடுத்து அவனிடம் கொடுத்தான். அதைப் பிரித்து ராமரத்தினம் படித்தான். கடிதம் எந்த விளிப்பும் இன்றி மொட்டையாக எழுதப் பெற்றிருந்தது: `என்னடா நினைச்சிண்டு இருக்கே? இந்த லெட்டரைக் கொண்டு வர்ற ஆளு கையில உன் ஒரு […]
செண்பகத்திற்கு அநதப் பெண்கள் பேசியது எதுவும் அவ்வளவாகப் புரியவில்லை. பட்டணத்திலிருந்து வந்திருந்தார்கள். காலேசில் படிக்கிறார்களாம்; ஏதோ ஆராய்ச்சி என்றும் அதற்கான புள்ளி விபர சேகரிப்பு என்றும் என்னன்னவோ புரியாத வார்த்தைகள் எல்லாம் பேசினார்கள். பாதிவழியில் படிப்பை நிறுத்தும் பெண்கள் பற்றி விவரங்கள் சேகரிப்பதாகவும் அவர்களின் வாழ்க்கை பற்றியும் அவர்கள் படிப்பை நிறுத்துகிற சூழல் பற்றியும் அறிந்து கொள்ள ஆசைப் படுவதாகவும் அதற்காக அவளைப் பற்றியும் அவளின் அக்கா கனகவல்லி பற்றியும் சொல்லச் சொன்னார்கள். செண்பகத்திற்கு அவளின் […]
அன்புமிக்க திண்ணை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். 3069 ஈரடிப் பாடல்களில் நான் எழுதிய ஆங்கில மகாபாரதம் வெளிவந்துவிட்டது. Cyberwit.net Publishers, Allahabad (info@cyberwit.net) இதனை வெளியிட்டுள்ளது. இத் தகவலைத் திண்ணையில் வெளியிட வேண்டுகிறேன். மிக்க நன்றி. அன்புடன் ஜோதிர்லதா கிரிஜா
“ஒரு உறைக்குள்ள ரெண்டு கத்தி இருக்க முடியாதே. ஒரு எடத்தில ரெண்டு அழகிக இருக்க முடியாதே” மணிகண்டன் சிரித்துக் கொண்டே சொன்னான். பேருந்தில் ஜன்னல் ஓர இருக்கையில் லலிதாவும், சுகன்யாவும் உட்கார்ந்திருந்தனர். சுகன்யா இறுகிய முகத்திலிருந்து புன்னகையை உதிர்த்தாள். லலிதா தூரத்தில் எங்கோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். விறு விறுப்பான காற்று மெல்லப் பேருந்தைச் சூழ்ந்து கொண்டது. சோளப் பயிர்கள் குட்டையாய் நின்றிருந்தன. சில் வண்டுகளின் சப்தம் ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது.அபரிமிதமான பனி எல்லோரையும் குறுகி […]
அமுதாராம் புகை நமக்குப் பகை புண்பட புண்பட புகைத்துக்கொண்டிருக்கிறோம் குடி குடியைக் கெடுக்கும் மொடாக்குடியன்களாக மாறிக்கொண்டிருக்கிறோம் பெண்கள் நாட்டின் கண்கள் பச்சைக்குழந்தையென்றும் பாராமல் பலாத்காரம் செய்துகொண்டிருக்கிறோம் இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் எல்லா வேலைகளுக்கும் இலஞ்சத்தை வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றோம் தூய்மை இந்தியா சாதி மதம் இன பேதம் பாராட்டி முதலாளித்துவ ஊழல் அரசியலால் அசுத்தப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். முரண்கள் அழகுதான் இவை?