பேசாமொழி 27வது இதழ் வெளியாகிவிட்டது…

Spread the love

படிக்க: http://pesaamoli.com/index_content_27.html

நண்பர்களே தமிழ் ஸ்டுடியோவின் இணைய இதழான பேசாமொழியின் 27வது இதழி வெளியாகிவிட்டது. இந்த இதழ் முழுக்க முழுக்க சென்னை சர்வதேசத் திரைப்பட விழா பற்றிய சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. குறிப்பாக ICAF இன் செயலாளராக இருக்கும் தங்கராஜின் நேர்காணல் இந்த இதழில் இடம்பெற்றுள்ளது. தவிர வூட்லேண்ட்ஸ் திரையரங்க உரிமையாளர் வெங்கட்டின் நேர்காணலும் மிக முக்கியமான ஒன்று. இவைகள் தவிர, திருவனந்தபுரம், பெங்களூரு, கோவா போன்ற நகரங்களில் நடைபெறும் திரைப்பட விழாக்கள் பற்றிய கட்டுரையும், மிக முக்கியமாக திரைப்பட விழாக்களின் அரசியல், தேவை மற்றும் வெனிஸ், கான்ஸ் திரைப்பட விழாக்கள் குறித்த யமுனா ராஜேந்திரனின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. பிலிம் நீயூஸ் ஆனந்தனின் கட்டுரை இந்த இதழோடு நிறைவடைந்துள்ளது. நண்பர்கள் எல்லாக் கட்டுரைகளையும் படித்துவிட்டு, தங்கள் கருத்துகளை பகிர்ந்துக்கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

பேசாமொழி என்பது இணைய இதழ்தான். அச்சில் வெளிவருவதில்லை. எனவே இணையத்தில் இலவசமாகவே பேசாமொழி இதழை படிக்கலாம்.

படிக்க: http://pesaamoli.com/index_content_27.html

Series Navigationகலைச்செல்வியின் ‘வலி’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து..நாளும் ஞானம் அருளும் திருவாடானையின் திருமுருகன்