பேராசிரியர் சி இலக்குவனார்: கலகக்காரர்

 

=சுப்ரபாரதிமணியன்

 

இதழியல் துறையிலும் ஈடுபட்டு தன் நில புலங்களை விற்று தமிழுக்குப் பணி செய்தவர் இலக்குவனார்.. குறள் நெறி, சங்க இலக்கியம், திராவிடக்கூட்டறவு ஆகிய இதழ்களை நட்த்தினார்.அயல் மொழிக்கலப்பால் தமிழ்நாட்டின் எல்லை சுருங்கியதை  உணர்ந்து  பிற மொழிக்கலப்பு இன்றியே இதழ்களில் எழுத வேண்டும் என்று வலியுறுத்தியவர்.  பகுத்தறிவேஉ வாழ்தலையும், செந்னெறி போற்றுதலையும் வலியுறுத்தியவர்.

மொழியின் அழிவிற்கு மொழிக்கலப்பும், பிற மொழிகளின் ஊடுருவலும், திணிப்பும் காரணமாகின்றன. எனவேதான்   இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் முன் நின்று போராடினார்.  ஒரு தமிழ்ப் பேராசிரியர் இந்திய பாதுகாப்புச் சட்டத்தின்படி கைது செய்யப்பட்ட நிகழ்வு இந்தி  எதிர்ப்புப் போராட்டத்தில் இலக்குவனாருக்கு நேர்ந்த்து. இருமுறை சிறை, 14 வழக்குகள், கல்லூரி வேலை இழப்பும் அவரைத் தளரச்செய்யவில்லை. தமிழகத்தில் தமிழ்தான் ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக், இசை மொழியாக, நீதி மொழியாக இருக்க வேண்டும் என்றக் கோரிக்கைகளை முன் வைத்து நடை பயணம் மேற்கொண்டு மாணவர்களை எழுச்சி பெறச் செய்தவர். இலக்குவனார் இந்தி எதிர்ப்புப்போராட்ட்த்தின் போது அவரது பங்களிப்பாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தை இந்தி எதிர்ப்புப் போராட்ட்த்திற்கு ஆற்றுப்படுத்தியதாலும் அதை மக்கள் எழுச்சியாக மாற்றி பெரும் கலககாரர் ஆனார்.அறிஞர் அண்ணா அவர்களும் “ இந்தி எதிர்ப்புப் போரை நிறுத்து விசை மதுரையில் பேராசிரியர் இலக்குவனாரிடம்தான் உள்ளது ”என்றார்.

தமிழைப் புறக்கணித்து மகளைப் போற்றும் மதியிழந்த மாந்தரைப் போல தமிழைப் புறக்கணித்து  இந்தியை  அரியணையில்  ஏற்ற முயல்கின்றனர்.  என்றவர், “ நமக்கொரு பணிப்பெண் வேண்டிய நிலைமயை நினைத்து நமது வீட்டுத்தலைவியை புறக்கணித்து விடலாமா., தமிழைகளில் சிலர் ஆங்கிலத்திற்கு  கொடுக்கும் முக்கியத்துவம் அவ்வாறே உள்ளது “ என்றும் கூறினார்.

தானே தமிழ் இயக்கமாக் வாழ்நாளில் இயங்கியவர். “ என் வாழ்க்கையே தமிழ் நலம் நாடிய போர்க்களம். இளமையில் வறுமையோடு போர். சாதியோடு போர். சமயத்தோடு போர். மூடநம்பிக்கையோடு போர். போர், போர் என்றும் ஓயாத போர் “ என்றார். தமிழ் இயக்கமாக வாழ்ந்தவர்

தமிழ் மொழிச் சிதைவும், புறக்கணிப்பும்  உச்சகட்டத்தில் இருக்கும் இன்றைய சூழலில் இலக்குவனார் மேற்கொண்ட கலகக்குரலும், போராட்டமும் இன்றைக்கு வெகு தேவையாகியிருக்கும் சூழல் தமிழுக்கு நேர்ந்திருப்பது துயரமானதே..       = சுப்ரபாரதிமணியன்  (9486101003 )

 

( கோவையில் நடைபெற்ற பேராசிரியர் இலக்குவனார்  பற்றிய “ சாகித்திய அக்காதமியும், கிருஸ்ணம்மாள்  பெண்கள் கல்லூரியும் இணைந்து நடத்திய

ஒரு நாள் கருத்தரங்கின் பேச்சின்  ஒரு பகுதி. பிற கட்டுரையாளர்கள்: திருவாளர்கள் சிற்பி பாலசுப்ரமணியன், முனைவர்கள் இளங்கோவன், மோகன், இராமகுருநாதன், மணலி சோமசுந்தரம், சந்திரா, மறைமலை இலக்குவனார்,  சூர்யகாந்தன் )

 

Series Navigationநடிகர் நாகேஷ் பிறந்த நாள் சிறப்பு பதிவு நான் நாகேஷ் : புத்தக விமர்சனம்ஜென் ஒரு புரிதல் 11