பொக்கிஷங்கள் – எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி ஐபிஎஸ். அம்பை பங்கேற்ற முற்றம் நிகழ்வு

Spread the love
 
கடந்த காலத்தின் உன்னதங்களுக்கு அல்லது நம்மால் உணரமுடியாத ஒன்றை நமக்காக பாதுகாத்து வைக்கும் எல்லாமே நமக்கு பொக்கிஷங்கல்தான். வரலாறு அந்த வகையில்தான் நமக்கு பொக்கிஷமாக இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்னர் பவா செல்லதுரை என்னிடத்தில் இப்படியான சில பொக்கிஷங்களை கொடுத்து வைத்தார். அதாவது தமிழ், மலையாளத்தின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் திருவண்ணாமலை முற்றம் நிகழ்வில் பங்கேற்ற ஒலிப்பேழைதான் அது. அதனை நவீன டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்றி முன்னமே தமிழ் ஸ்டுடியோவில் பதிவேற்றி இருந்தேன். சுராவின் குரலை அப்படித்தான் தமிழகம் கேட்டுக்கொண்டிருந்தது. ஆனால் இடையில் பல்வேறு சிக்கல்களால் அது தொடர்ந்து நடக்காமல் போனது. தற்போது மீண்டும் புத்துணர்வு பெற்று அத்தகைய ஒலி வடிவிலான எழுத்தாளர்களின் சந்திப்பை, அவர்களின் பேச்சை உங்களுக்கு கொடுக்கிறோம். இதனை டிஜிட்டல் வடிவத்திற்கு மாற்ற நண்பர் தவநெறி செல்வன் பொருளாதார உதவி செய்தார். அவருக்கு தமிழ் ஸ்டுடியோவின் நன்றி.
முதலாவதாக எஸ். ராமகிருஷ்ணன், திலகவதி ஐபிஎஸ். அம்பை பங்கேற்ற முற்றம் நிகழ்வை கேட்டு மகிழுங்கள்.
Series Navigationரகசியங்கள்கெட்டிக்காரன்