பொக்கிஷம் !

Spread the love

 

 

 
ஸ்ரீரங்கம் சௌரிராஜன்
 
அப்பாவின் முதுமையின்
கடைசி நாட்களில்
கைவிரல்கள்
பழைய மாதிரி
கையெழுத்திட முடியவில்லை
 
இன்னும் 
நாட்கள் சென்றால்
அஞ்சலகக் கணக்கிலுள்ள
இருநூறு ரூபா
இல்லை என்றாகிவிடும்
 
அப்பாவின் கணக்கை
மூடியதில்
அச்சிறு தொகை
இப்போது என் கையில் …
 
தொகை சிறியது
என்னும் வருத்தம் 
கொஞ்சம்கூட எனக்கில்லை
 
என் சேமிப்பில்
இணைந்துவிட்ட அத்தொகை
என் பொக்கிஷம்
இன்றும் என்றும் …
 
                  +++++++
Series Navigationஇந்துக்கோவில்களைப் பக்தர்கள் வசம் ஒப்படைக்கலாமா?சொல்வனம் இணையப் பத்திரிகையின் 250 ஆம் இதழ்