பொங்கல் வருகுது

Spread the loveசி. ஜெயபாரதன், கனடா

பொங்கல் வருகுது ! புத்தரிசி
பொங்க வருகுது ! மகிழ்ச்சி
பொங்கி வருகுது !
எங்களை எல்லாம் இன்பத்தில்
முங்க வருகுது !  நாவில்
தங்க வருகுது !  கும்பி
குளிர வருகுது ! கும்மி
அடிக்க வருகுது !  அன்பில்
அணைக்க வருகுது ! விழாவில்
இணைக்க வருகுது !
புத்தாடை மங்கையர்
உட்கார்ந்து
முற்றத்தில் வண்ணக்
கோல மிட்டுப்
பால் பொங்கல் இனிதாய்ப்
பொங்கப் போகுது !
வெண் பொங்கல்
வெந்திடப் போகுது !  கரும்பு

காத்திருக்க

காளை மாடு தாளமிட
சர்க்கரைப் பொங்கல்
அற்புதமாய்ப்
புதுப் பானையில் வழிந்து
பொங்கப் போகுது.

Series Navigation3 இசை விமர்சனம்ஷங்கரின் ‘ நண்பன் ‘