போப்பாலஜி

 

 
சி. ஜெயபாரதன், கனடா
 
நூறாண்டுக்கு முன் நேர்ந்த 
கனடா கதை ! 
கத்தோலிக் பாதிரிமார்,
பிரிட்டன்
காலனி ஆட்சியில் செய்த
பச்சிளம் 
பாலர் படுகொலை இது.
ஜாலியன் 
வாலாபாக் படுகொலை,
ஹிட்லர்
ஹோலோகாஸ்ட் 
கடுங்கொலை அணியில்
தொடர்ந்து வருவது ! 
வரலாற்று முதன்மை பெற்றது.
 
 
பூர்வக் குடியினர்
சார்ந்த குழந்தைகள் பன்னூறு,
காத்தலிக் மதப் போதகர்
நடத்திய
தங்கு கல்வித் தளங்களில்
பெற்ற தாய், தந்தையரிடம் இருந்து
பறித்து, பிரித்து
ஏதோ காரணங் களால்,
கல்விக் கூடங்களில்
கோரப் படுகொலை செய்யப் பட்டு
பேரில்லா சமாதிகளில்
புதைக்கப் பட்டார்,
சத்த மின்றி
அத்தனை மாணவரும் !
 
 
காத்தலிக் கடவுள்
வாட்டிகன்,
போப்பாண்டவர்
மன்னிப்புக் கோட்டார் 
கண்ணீர் சிந்தி !
வரலாற்று
போப்பாலஜி !
 
**************
Series Navigationஇருள் சூழ்ந்த பௌர்ணமி!ஒஸ்கார் விருது வழங்கும் விழா – 2022