ப.தனஞ்ஜெயன் கவிதைகள்

Spread the love

ப.தனஞ்ஜெயன்

ஆலயத்தில் எரியும்

சுடரில் தன்னை கருமையாக மாற்றிக்கொண்டது

விக்கிரகங்கள்

பணக்காரன் வழிபட்டுச் சென்ற இடத்தில்

ஒரு ஏழை வழிபாட்டைத் தொடர்கிறான்

தெய்வநிலைக்கு விளங்கங்களைக்

கூறிக்கொண்ட மனிதனிடம்

தன்னை கடவுள் என்றும்

பிரபஞ்சத்தை நான்தான் படைத்தேன் என்று தெய்வீகம் சொல்லியதில்லை

காடுகளில் கர்ஜிக்கும் சிங்கம் ஒரு நாளும் தன்னை அரசன் என்று சொல்லியதில்லை

மழை

காற்று

எப்படிப் பிறக்கிறது

கரு எதற்கு உருவாகிறது

எனக் காரணங்களை முன்னிறுத்தினால்

இந்த உலக இயக்கத்தை

நிறுத்திக்கொள்ள முடியும்

மதயானைக் கூட்டத்தில்

தன் வர்ம பார்வையால் போதி தர்மன்

அமைதியை நிலை நிறுத்த

முயன்றும்

நஞ்சுண்டு அமைதியடைந்தான்

பொருளை ஆராய்ந்த பெரியாருக்கு எதிர் வினையாகப்

பொருளற்ற வேத குண்டத்தில்

எரிந்து போன சொற்களும்

சில மனிதர்களை ஆசுவாசப்படுத்துகிறது

எழுதிய வார்த்தைகளுக்குப்

பொருள் கூறித்தான் ஆகவேண்டும்

பொருளற்றது வாழ்க்கையா

பொருளுடையது வாழ்க்கையா

புத்தனிடம் கேட்டபொழுது

அவன் அரண்மனையில்

அவன் உடைமைகள் இருப்பதாகச்சொன்னான்

பொருளுடையதைத்

தேர்வு செய்வதை ஐந்தாண்டு திட்டமாகக் கொண்ட அதிகாரம் பிடித்த மதயானைகள்

பிறரை மண்ணை வாரி இறைத்து மூடிவிடுகிறது

நான் அவர்கள் முன்

சிவந்த மலரை நீட்டுகிறேன்

அதன் ஒவ்வொரு இதழ்களிலும்

ஒரு அம்பு இருக்கிறது

இனி அம்பு விதானங்கள்தான்

மனிதர்களைக் காப்பாற்றும்.

ப.தனஞ்ஜெயன்

danadjeane1979@gmail.com

Series Navigationகொ பிநேர்மையின் தரிசனம் கண்டேன்