மதம்

 

உங்கள் உடம்பில்
ப‌ச்சை குத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் உடம்பில்
எதில் வேண்டுமானாலும்
பச்சை குத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் உடம்பில்
எங்கு வேண்டுமானாலும்
பச்சை குத்திக்கொள்ளுங்கள்.
உங்கள் அழகு
எங்கள் அசிங்கம்.
அசிங்கத்தை
சமுதாயத்தின் மீது
பச்சைக்குத்திவிட‌
உங்களுக்கு துளியும் உரிமை இல்லை.
பச்சைப்பொய்களை
நிரந்தரமாக குத்திக்கொண்டால் அது
உண்மை ஆகாது.
Series Navigationபேனா முனையில் இந்திய ஒலிம்பிக்தோரணங்கள் ஆடுகின்றன‌!