மமதா என்ற மமதை

Spread the love

ராஜசங்கர்

மோடியை சிபிஐ விசாரிச்சது. மமதா ஆனா இப்படி பண்ணுதேன்னு கேக்கும் நண்பர்கள் ஒன்றை புரிந்து கொள்ளவேண்டும். மமதாவுக்கு எரியவீட்டிலே புடுங்கின வரைக்கும் லாபம்.

மமதா நடத்துவது ஒரு மாபியா கம்பெனி. மமதா சொல்றது தான் சட்டம், செய்யுறது தான் ஆட்சி. கம்மினிஸ்டு நடுமட்ட கீழ்மட்ட ரவுடிகள் முழுக்க மமதா கட்சிக்கு வந்துட்டாங்க. கம்மினிஸ்டு ஆட்சியிலேயாவது கேரளா, பீகார், திரிபுரா கட்சி சொல்றத கேக்குறமாதிரி நடிக்கவாவது செய்யனும். ஆனா மமதா ஆட்சியிலே உள்ளூர் ஆட்கள் வைச்சது தான் சட்டம்.

சரி ஆனா மோடி மேலே ஏன் இம்புட்டு வெறுப்பு பார்த்தா கல்கத்தா துறைமுகத்தை வைச்சுத்தான் வங்காள பொருளாதாரமே ஓடுதுன்னு இருந்ததுக்கு மாற்று வழி காட்டிட்டார். தொழிற்சாலை ஏதும் கிடையாது பிழைக்க வழி இல்லே வடகிழக்கு மாநிலங்களுக்கு போகும் சரக்கு எல்லாம் இப்படித்தான் போயாகனும் பீகார் உட்பட பல மாநிலங்களுக்கு வரும் சரக்கும் கொல்கத்தா வழியாத்தா வரனும் என இருந்ததுக்கு மாற்று வழி வந்திடுச்சு.

கங்கையிலேயே நேரா சரக்கு ஏற்றலாம் இறக்கலாம். வடகிழக்கு மாநிலங்களுக்கு சரக்கு அனுப்ப சிட்டகாங் துறைமுகம் வழியாவும் அந்தப்பக்கம் மியான்மார் சாலை வழியாவும் செய்யலாம் என பல திட்டங்களும் வழிகளும் வந்திடுச்சு.

இப்பவே அதனால் வந்துகொண்டிருந்த வருமானம் குறைய ஆரம்பித்துவிட்டது. அப்படீன்னா அடுத்த தேர்தலிலே மமதா ஜெயிக்கறது என்னா நெம்பினாலும் நடக்காது.

பணம் கொடுத்துக்கொண்டிருந்த சகாரா நிறுவனங்களும் திவால் நடவடிக்கைக்கு பயந்து பணத்தை கட்டிவிட்டன. எனவே செலவுக்கும் பஞ்சம்.

அப்புறம் என்ன? ஏ பாயாச மோடியே தான்.

மமதா பண்ணின ஊழல் திருட்டு டிமுக்கால்களை விட மோசம். மக்கள் சேமித்த பணத்திலே ஆட்டைய போட்டது தான் இதிலே குறிப்பிடத்தக்கது.

ஆளுநர் எல்லாம் நடவடிக்கை எடுக்கமாட்டார். ஆட்சி எல்லாம் கலைக்க மாட்டாங்க. மமதா எதிர்க்கட்சியா என்னென்ன செய்ய முடியும் என் மோடிக்கு தெரியும். நடப்பது எல்லாத்துக்கும் மமதா மேல பழி போடுறது தான் சரியான வழிமுறை.

Series Navigationமுன்னிலைப் பத்துஇந்திய அடுக்கு – ஒரு நிதிப் புரட்சி – பின்னணி