Posted in

மலட்டுக் கவி

This entry is part 33 of 39 in the series 19 ஆகஸ்ட் 2012

   —  ரமணி

 

ஒரு மிருகத்தை

வேட்டையாடுவது போல

அடம்பிடிக்கும் குழந்தைக்குச்

சோறூட்டுவது போல

வயதானவர்களின்

பிடிவாதம் தளர்த்துமாப் போல

பரீட்சை நாளின்

முன்னிரவு போல

எண்ணங்களுக்கு வடிவு

கொடுப்பதும் ஆகிவிடுகிறது.

எங்கேயோ புதர்களுக்குள் பதுங்கிவிடும்

வாயில் திணித்ததை

என்மேலேயே துப்பிவிடும்

முதுகில் ஏற்றிக்கொண்ட

காலத்தால் சண்டையிடும்

ஓட்டைத் தொட்டியில்

தங்காது தப்பிவிடும்

நால்வகைப் போக்கில்

உருக்கொள்ளாது

எத்தனை முறை

தரிக்காது போயிருக்கிறது?

Series Navigationபூங்காவனம் ஒன்பதாவது இதழ் மீது ஒரு பார்வைமலைபேச்சு -செஞ்சி சொல்லும்கதை – 39

3 thoughts on “மலட்டுக் கவி

  1. மலை ஏறினால் சறுக்கல் உண்டு ,மனம் வழுக்கினால் சறுக்கல் உண்டு, மலடு என்பதற்காக மன்ம் வருந்தாதீர் .அவனுக்கு அவளும், அவளுக்கு அவனும் குழந்தைகள் இறுதி வரை.
    மடியில் தலை சாய்ந்து உண்டு, விண்டு ,மகிழலாம் அன்புடன் ஆரா

  2. கவிஞர் அரா, அவர் மலடு என்பதை வேறு ஒன்றிற்கு குறியீடாக கொண்டுள்ளார்….

  3. கவிஞர் ஆரா, இக்கவிதை சிந்தனையில் உதிக்கும் எண்ணங்களை முழுமையாய் வார்த்தைகளில் கொணர முடியா இயலாமையையே பேசுகிறது. காணும் காட்சிகளோ, கிட்டும் அனுபவங்களோ கவிமனத்தை தூண்டுகிறது.ஆயினும் அந்த உள்ளக் கிடக்கையை முழுமையாக கொண்டுவர இயலாத கணத்தில் கவிஞன் எதிர்கொள்ளும் அந்த தவிப்பையும், ஆற்றாமையையுமே கவிஞர் மலடு எனம் குறியீட்டால் இங்கு உணார்த்துகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *