மலர்களின் துயரம்

Spread the love

 

             ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

 
விடியற்காலை மழையில்
சகதியானது
எங்கள் வீட்டு வாசல்
 
இது அறியாமல்
பாரிஜாத மலர்களைத்
தூவியிருந்தன
இரண்டு மரங்கள்
 
பூமி
மெல்லிய பூமெத்தையானது
தனியழகுதான்
 
காலை
வாசல் பெருக்கும் போது
கூடை மலர்களும் குப்பையாகி
வாழ்விழந்து நிறம் மாறி
மனம் வருந்தின ! 
 
 
Series Navigationசூட்சுமம்வெப்ப யுகப் பிரளயம்!