மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 6 of 12 in the series 4 ஜூலை 2016

( எம் . ஜெயராமசர்மா… மெல்பேண் … அவுஸ்திரேலியா )

கடவுளில் காதல் கொள்ளு
கல்வியில் காதல் கொள்ளு
கடமையில் காதல் கொள்ளு
காதலில் காதல் கொள்ளு
இடர்தரும் விதத்தில் காதல்
எற்படும் பொழுது ஆங்கே
குறையுனை வந்தே சேரும்
குழப்பத்தில் இருப்பாய் நாளும் !

ஒருதலைக் காதல் செய்தால்
உளமெலாம் வருத்தம் சேரும்
நிலவதைப் பார்க்கும் போதும்
நெருபென நினைக்கத் தோன்றும்
அளவிலா துன்பம் அங்கே
அகத்தினை உடைத்தே நிற்கும்
ஒருதலைக் காதல் என்றும்
உயிருக்கே ஊறாய் நிற்கும் !

கதைகளில் காதல் வந்தால்
கற்பனை என்று சொல்வோம்
கம்பனின் காதல் பார்த்து
கவிநயம் என்றே சொல்வோம்
கன்னியின் காதல் யாவும்
காளையர் காதல் யாவும்
எண்ணிடும் போது நெஞ்சில்
ஏக்கமாய் இருக்கு திப்போ !

கயவரிடம் காதல் போனால்
கண்ணியத்தை இழந்து நிற்கும்
காதல் என்னும் பெயராலே
மோதலங்கே வெடித்து நிற்கும்
பேதலித்து நிற்கும் அவர்
பேய் எனவே மாறிடுவர்
காதலினால் கொலை செய்து
கருணையினை ஒழித்து நிற்பார் !

ஒருதலைக் காதலால் உருக்குலைந்து போகாதீர்
அழிதலைச் செய்கின்ற அரக்கராய் மாறாதீர்
காதலென்னும் புனிதத்தை களங்கமெலாம் ஆக்காதீர்
காதலினை போற்றுங்கள் கண்ணியமாய் பார்த்திடுங்கள் !

மனிதனது வாழ்வினுக்கு மாமருந்தாய் வந்ததுதான்
மாண்புடைய காதலென மனங்களிலே கொண்டிடுவோம்
மரணமதைத் தருகின்ற வழியிலதை ஆக்காதீர்
மனமெல்லாம் நற்காதல் மலர்ந்துவிடச் செய்துநிற்போம் !

Series Navigationபுறக்கோள் புளுடோவில் அடித்தளப் பனிக்கடல் உறைந்திருப்பதைப் புதுத் தொடுவான் விண்ணுளவி உறுதிப் படுத்தியுள்ளதுகவித்துவப் புள்ளிகள் – செல்வராஜ் ஜெகதீசனின் ‘சிவப்பு பச்சை மஞ்சள் வெள்ளை’ –
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *