மீள்பதிவு

 

 

கிரணங்கள் ஊடுருவிப் பாய்கிறது

மனிதனின் நகல்

நிழல்களைத் தொடர்கிறது

பசி கொண்ட காளைகள்

வைக்கோல் போரை சுமக்கின்றன

உச்சி வெயில்

பாதைகளை மறந்து

நிஸ்சிந்தையாய் தோண்டித் துழாவி

இலக்கியம் ஒரு கடைச்சரக்கு

கொள்வாரின்றி நிலத்துக்கு சுமையாய்

கவிதையில்

சந்தங்களையும், தாளங்களையும்

துரத்தியாயிற்று

மின்கம்பம் ஒலியைக் கடத்துவது

சிறுபிள்ளை விளையாட்டு

நீ நான்

உன்னையும் என்னையும்

அடகு வைத்து விட்டால்

உலகம் இயங்காது

வேசிகளாய்

அவிழ்த்துக் காட்டும் மரங்கள்

ஒரு மதிய வேளை

எப்பவும் போல் இருக்கும்

இறப்புச் செய்தி வரும் வரை

நேற்று நடந்து வந்த

பாதை தான்

போதையில் தெரிகிறது

நான்காய்

கைப்பிடிக்குள் அடக்க

முடியுமா கடலை.

 

Series Navigationவெளியிடமுடியாத ரகசியம்!நாளைக்கு இருப்பாயோ நல்லுலகே…?