முட்டைக்கோஸ் வதக்கல்

நேரம் 25 நிமிடம்

 

தேவையான பொருட்கள்

1/4 கோப்பை துருவிய தேங்காய்
2 மேஜைக்கரண்டி எண்ணெய்
1 தேக்கரண்டி கடுகு
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
2 தேக்கரண்டி கடலைப்பருப்பு (உளுந்தும் எடுத்துகொள்ளலாம்)
1 அல்லது 2 காய்ந்த மிளகாய்
1 சிறிய முழு முட்டைக்கோஸ் பொடிப்பொடியாக நறுக்கியது (எட்டு கோப்பை )
3/4 தேக்கரண்டி உப்பு
2 மேஜைக்கரண்டி கொத்துமல்லி
1 மேஜைக்கரண்டி எலுமிச்சை சாறு

செய்முறை

எண்ணெயை ஒரு வாணலியில் சூடாக்கி அதில் கடுகு போட்டு வெடிக்க விடவும். 10 வினாடிகள்
வெடிப்பது நின்றதும், இதில் கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும். கடலைப்பருப்பு பொன்னிறமானதும், அதில் காய்ந்த மிளகாயை போட்டு சற்று வதக்கவும். இதில் மஞ்சள் தூள், முட்டைக்கொஸ் போட்டு வதக்கவும். 3-5 நிமிடங்கள் வதக்கியபின்னர் உப்பு சேர்த்து கொஞ்சம் வதக்கவும். இதில் தேங்காய் துருவலை சேர்த்து வதக்கவும். 1 நிமிடம்
இப்போது தீயிலிருந்து எடுத்து இதில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்துகொள்ளலாம்

Series Navigationபகல் கனவு ( ஒரு குறுகுறுங்கதை)நரேந்திரன் குறிப்புகள். (சத்குரு ஜக்கி வாசுதேவ், காலேஸ்வரம் )