முரசொலி மாறனை மறந்த திமுக.

Spread the love

 பீர்பால் 

ஆணித்தரமாக இந்த தேர்தல் ஒன்றை நிரூபித்திருக்கிறது – திமுக , அதிமுக இரண்டும் தான் தலையாய தமிழக கட்சிகள் என்று.

அதிலும், திரு.கருணாநிதி செய்த ஒரு தவறான , அரசியல் ரீதியாக, அணுகுமுறையால் காங்கிரஸீற்கு ஆதரவு போன்ற தோற்றம்.

6.4 % மற்றும் எட்டு சீட்.

காங்கிரஸூடனான கூட்டணியால் திமுக இழந்தது தான் அதிகம்.

திமுக-வின் மேல் மக்களுக்கு ஈழத்தின் நிலைப்பாட்டால் வெறுப்புக் கிடையாது என்பதற்கு,  பிரபாகனனின் படத்தை பிரமாண்டமாக வைத்து வாக்குச் சேகரித்த திரு.சீமானிற்கு வாக்கு குவிந்திருக்க வேண்டும். அவரை விட நோட்டா விற்கு கிடைத்த வாக்குகள் தான் அதிகம்.

தவிர, திரு.கருணாநிதி செய்ய இருந்த மற்றொரு தவறு தடுக்கப்பட்டது – திரு.மு.க.அழகிரி கமெண்டால்.

அதுதான், மரை கழண்டு போன நிலையில் உள்ள, திரு.விஜயகாந்த் கூட்டணி. நழுவிய பழம் , பாலை தவிர்த்து சாக்கடையில் விழுந்தது.

வெம்பி வெதும்பி தீய எண்ணம் மட்டுமே, நிலைப்பாட்டாகிப் போன திரு.வை.கோவின் சூழ்ச்சியில் இந்த விதூஷகர் விழ,

ஒவ்வொரு மேடையில் , மேடை ஸ்ட்ராங் அனால் வாக்கு வங்கி வீக்காகிறது என்றறியாமல்,  திரு.ஜி.கே.வாசன் மற்றும் கம்யூனிஸ்ட்கள்.

அதிலும், திருமதி.விஜயகாந்த் மச்சான் திரு.சுதீஷ் ஆர்ப்பாட்டம் அப்பப்பா… வாங்கிய காசிற்கு கூவல் நன்றாகவே இருந்தது.

இதில், திரு.ஜி.கே.வாசன் எடுத்த முடிவு, என்ன சொல்வது,

அமைதியாக முடிவே எடுக்காமல் சும்மா இருந்திருக்கிறார் அவர் அப்பா என்று சொல்லிக் கொடுத்த கூட்டம்,

அவரது தந்தை, மௌனத்தின் பின்னே, பல நடவடிக்கைகள் எடுப்பார் என்பதை ஏன் சொல்லவில்லையோ/

கட்சியனரும், அரசியல் வல்லுநர் எவரும் அண்ட முடியா நிலையில் அந்நியராகவே போய் விட்டார், திரு.வாசன்.

கம்யூனிஸ்ட்கள், மிக மிக கேவலமான நிலையில் இருந்தார். உலக அரசியல், சமூக போராட்டங்கள் என கலக்குபவர்கள்,  திரு.விஜயகாந்தின் ;உலக சூத்துதடி ஒரு ரவுண்டு’ தாண்டி பிறழ்மன நிலையில் இருப்பவரை முதல்வர் என்று முன்னிறுத்தி, அதற்கு,
கட்டப்பஞ்சாயத்தே அரசியலில் வெற்றி அடைய தீர்வு எனும் நிலை கொண்ட திரு.திருமாவளவனுடன் கோஷமிட்டபடி….

பார்த்தாலே ‘0’ கூட்டணி என்ற நிலை.

அப்புறம். சிந்தனாவாதி அவதாரம் தரித்த மாம்பழம் திரு.அன்புமணி.

இவரது வன்னியர் டிரஸ்ட் பற்றிய கணக்கு வழக்க்குகளை இணையத்தில் போட்ட பின் இவர் திமுக, அதிமுக வை திருடர்கள் என்று சொல்லலாம்.

அத்திருடர்கள் தமிழகத்திற்கு ஆற்றிய பணிகள் பல உண்டு.

இவரோ, நான்… நான்… நான்.. என்று பவர் பாயிண்ட் பிரசண்டேஷனுடன், ஆடிய ஆட்டும் மக்களை கவர்ந்தது உண்மை.

ஆனால், சிபிஐ வழக்கு ஆரம்பித்தால் – மெடிகல் கல்லூரி அனுமதி – இவரது வண்டவாளம் அதிரும்.

இப்படியாக,  மீதமிருக்கும்

திமுக அதிமுகவில்

திமுக வெல்லாமல் போனதற்கு சில காரணங்களே..

  1. திரு.முரசொலி மாறன் இருந்திருந்தால், “ஸ்டாலினை முன்நிலைபடுத்தினால், திமுக – பாஜக கூட்டு சாத்தியம்’ என்று திரு.சுப்ரமணிய சாமி சொன்னவுடன், உரிய நடவடிக்கை எடுத்திருப்பார்.

ஒவ்வொரு முறையும் ஒரு தொழில் புரட்சியின் போது மத்திய அரசில் பங்கு கொண்டு, அதிகமாக தமிழகமும், கொஞ்சமாக திமுகவினரும் காரணமாக இருந்தது போல், இந்த ஸ்டார்ட் அப் உலகில், நிறைய கிடைத்திருக்கும்,

நிச்சயமாக திமுக் பாஜக – தமாகா  கூட்டணி அமைந்திருந்தால்.
( 2ஜி முரசொலி மாறன் இல்லாததால், அதிகமாக திமுகவினரும், கொஞ்சமாக தமிழகமும் பயன் அடைந்தது )

2    திரு.ஸ்டாலினை , முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தி, திரு.வாசன், தமாகா வுடன் கூட்டணி கண்டிருந்தால், நிச்சயம் + தான்.

3    முக்கியமானது, திரு.ஸ்டாலினை இள்மை துள்ளல் எங்க்ஸ்டராக, “டெரர்’ காட்டாமல், அவரது சகஜ தோற்றமுடன்,
இன்றைய நிலை, சமூக மேம்பாட்டுத்திட்டங்கள், மத்திய அரசுடன் இணக்க நிலை என்று பேசச் சொல்லிக் காட்டியிருக்க வேண்டும்.

மேலும், வருங்காலத்தில் திமுக வெல்ல, திரு.ஸ்டாலினை தலைவராக திமுக அறிவிக்க வேண்டும். திரு.மு.க  மேல் நிலை ஆலோசகராக இருக்க வேண்டும்.

திரு.உதயநிதி, இளைஞர் திமுகவின் தலைவராக வர வேண்டும்.

இதில் ஒன்றும் வாரிசு அரசியல் விமர்சனம் இல்லை, இது தான் நிதர்சனம். திமுக என்ன சங்கர மடமா? எங்கோ பிறந்த ஏதோ ஒரு பரதேசி வாரிசாக வர.

அதனால், திரு.மு.கவின் நிலை மாறி திரு.ஸ்டாலின் முன்நிலை கொள்ளட்டும், திமுக வென்றிட.
அப்புறம், எச் ரா சற்குணம் திரு.அப்துல்ரஹ்மான் என்று திரு.கருணாநிதி காட்டும் தவறான நிலைப்பாட்டை திரு.ஸ்டாலின் ஒழித்திடல் வேண்டும்.

திமுக – பாஜக – வாசன் கூட்டணி காலத்தில் கட்டாயம்.

பி.கு. இம்முறை எதிர்கட்சி உறுப்பினர்கள் அனுபவ சிங்கங்கள். வெறும் அடிமை கூட்டமல்ல, டம் டம் என்று மேஜை தட்ட.

திரு.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக வருதலே, சாலச் சிற்ந்தது.

இதனை இதனால் இவன் முடிப்பான் – என்பது

குறளோவியம் வரைந்தவருக்கு தெரியாதா என்ன?

Series Navigation19.5.2016க்குப் பின்பும் எதிர்க்கட்சிகள் கைவிடக்கூடாத பிரச்சனைகள் ‘முசுறும் காலமும்’