மூன்று கவிதைகள்

 

சு. இராமகோபால்

 

தணிப்பு

 

குளிர்ப்பருவ நெருப்புக் கோழி

கால்களில் பத்துக் கொப்பரைகள்

கவிதை தாலாட்டு

 

இது சொல்கிறது என்ன

 

 

வழிப்போக்குகளாக

இருந்து விடுவது

மிகுந்த மகிழ்ச்சி

புலப்படும் தொடக்கத்தில்

தெரியாமல் சிம்மாசனத்தில்

சடங்குச் செம்மல் கதறல்

அப்படி மழுங்கும் வாளிற்குப் படையில்

இடமில்லையெனும் தூறலில்

பூவாகிவிட்டாலாவது ஏதாவது

நாற்றம் எடுத்துவிட அசைந்த குருதி

காற்றில் நடந்துகொண்டிருக்க

அறையில்

பின்னதிடம் முன்னது

பரவாயில்லையேயெனப் பாவிக்க

விழிக்கும் தூரத்தில்

நட்சத்திரமொன்று வாலாட்ட

பூமி

கர்ப்பமாகிவிட்டது

 

 

அசரீர், மூன்று 

 

மழைக்குப் பிறகு மலர்ச்சி

அலையில் குழைந்த அழைப்பு

அழைப்பு:

தவளும்—

அமைதி

 

 

 

 

 

 

Series Navigationஇரண்டாவது கதவு !27 கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!