மூன்று பேர்

 

 
ஹிந்தியில் : தேவி பிரசாத் மிஸ்ர
தமிழில் : வசந்ததீபன்
_________________
 
எங்கே தில்லி மற்றும் காஜியாபாத்தின் எல்லை சந்திக்கிறது 
அங்கே மூன்று பெண்கள்
ஒரு மோட்டார் சைக்கிள் மேல் ஏறி வந்து இருக்கிறார்கள்
அவர்கள் ஈ. டி. எம். மில் அன்பின் பஞ்சாயத்தின் தீர்ப்பு பார்ப்பார்கள்
என்பது மட்டும் இப்போது உறுதியாக இருக்கிறது. 
 
அதற்குப் பிறகான நடவடிக்கை உறுதியாக இல்லை. 
 
ஓடும் சினிமா பார்ப்பது மற்றும் அரங்கில் அரட்டையடித்து அக்கம் பக்கத்தினரை சினிமா பார்க்க விடாமல் செய்வது
சுதந்திரத்தின் பெரிய அடையாளம் இவற்றை விட அதிகம் 
அவர்களிடம் இல்லை. 
 
சினிமாவுக்கு பிறகு அவர்கள் மாலுக்குள்ளே சுற்றுகிறார்கள்
ஆனால் சாப்பிடுகிறார்கள் வெளியே
ஒரு தள்ளுவண்டியில். 
 
மோமோ நன்றாக இல்லை. 
 
இனி எப்பவும் சாப்பிடமாட்டார்கள்
ஒரு பெண் சொல்கிறாள். 
 
அவர்கள் லிம்கா, கோலா, ஃபேண்டா தங்களுக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள் குடிக்கிறார்கள் இருமுகிறார்கள் துப்புகிறார்கள் மற்றும்
ஏ.. மெண்டல், 
அடுத்த முறை இந்த விஷத்தை குடிக்க வைக்காதே
உன்னுடைய அம்மாவால் 
மாம்பழ சர்பத் பண்ணிக் கொண்டு வா
உடன் வந்த பையனிடம் சொல்கிறார்கள். 
 
பின்னர் அவர்கள் கூச்சலிடுகிறார்கள்  அப்படி அவர்கள் ஒருபோதும் அழுகாதது போல சிரிக்கிறார்கள். 
 
இதற்கு நடுவில் ஒரு பெண்ணுக்கு அவளின் சகோதரனிடமிருந்து கைபேசியில் அழைப்பு வருகிறது. 
 
அவனுடைய நண்பன் அவளை ஈ. டி. எம்.க்கு முன்னே பச்சை வண்ண ஒயின் குடிப்பதை பார்த்தான் என்று. 
 
பெண் பதிலளிக்கிறாள் _எங்கே நடந்ததை பேசிக் கொண்டிருக்கிறீர்கள் தரக்குறைவாய்? 
என்ன கண்ணாடி போட்டிருக்கிறான் உன்னுடைய  நண்பன்? 
நானோ தொழிற்சாலையின் வேலைக்காரி
வேலை செய்ய புறப்பட்டுப் கொண்டிருக்கிறேன். 
 
மூன்று பெண்களும் ஏறிப் போகிறார்கள் மோட்டார் சைக்கிளின் மேல்
தெரியவில்லை எந்த அற்பமானவன் புகார் செய்தான் _ ஒரு பெண் கேட்கிறாள். 
 
சகோதரனின் அழைப்பு மறுபடியும் வருகிறது
பெண் தவிர்த்து நிறுத்துகிறாள் மற்றும் அலறுகிறாள் _ 
அற்பமானவன் துரத்தினான்
 அற்பமானவன் துரத்துகிறான்
மற்றும் 
அவன் ஒருடிரக்குக் கீழே விழுகிறான். 
 
பையன் உயிரோடு இருக்கவில்லை.
 
ஆனால் அவர்கள் மூவரும் தப்பித்தார்கள் _ 
காவல் நிலையத்தின் கொடூரம் மற்றும் வதந்திகள் மற்றும்  ஆஸ்பத்திரியின் மனிதாபிமானமற்றத்தனம் இவ்வளவிருந்தும்
இந்த மாதிரி திடீரென 
எதிரியைத் தாக்கிய முறையின்
 மூன்று மாதிரிகள் 
மற்றும் இச்சைகளின் அரசியலின் மூன்று உத்திகள் 
மற்றும் விடுதலை இறக்குமதி செய்வதின் 
மூன்று அருமையான உதாரணங்கள் தப்பிப் போனது
🦀
மோமோ _ ஒரு வகையான தின்பண்டங்கள்
🦀
ஹிந்தியில் : தேவி பிரசாத் மிஸ்ர
தமிழில் : வசந்ததீபன்
 
 
 
 
Series Navigationவீடுகோவில்கள் யார் வசம்?