மூன்று முடியவில்லை

Spread the love

சு. இராமகோபால்

கூன் விழுந்தவன் கைத்தடியை ஊன்றியவண்ணம் எப்படியிருக்கிறாயென்று கேட்டுவிட்டுப் போகிறான். முன்பின் தெரியவில்லை. வெளியேறுகிறான். ஓட்டையை உதறி நழுவிய ஆரஞ்சுப்பழம் கண்மூடித்தனமாக வழுவிக்கொண்டிருந்த கொடிக்குள் பதுங்கிக்கிடக்கிறது.. மின்சாரக் கம்பத்தில் தட்டியிருந்த அழைப்பிதழ்: இத்தடத்திலுள்ள குப்பைகளையெல்லாம் தத்தெடுத்துக்கொள்ளலாம். வெள்ளைச் சட்டையணிந்த கறுப்புப் பெண் பன்றிக்குட்டிகளைப் போலிருந்த நான்கு நாய்கள் நடுவில் கரகாட்டம். ஈராக் போரை ஆரம்பித்த குடியிலிருந்து மீண்டு ஜனாதிபதியான புஷ் இரண்டு கீழிறங்கியதும் கொன்ற சிப்பாய்களின் படங்களை வரைந்து வரைந்து குறுகியும் நெடுகியுமாக உதிரிகள். கொடுக்கு கொடுக்குதான். பள்ளத்தில் குட்டையாக எதிர்பார்த்த ஆலகாலன் இதோ இப்படியொன்றைப் பார்த்திருக்கிறாயா என்ற சலனம். கையில் நான்குமுழப் பாம்புச்சட்டை. காலடியில் மூட்டை நிறைய பொறுக்கிவந்த தகர உடுக்கைகள். வியாபாரம்தான். பரவாயில்லை.

Series Navigationயான் x மனம் = தீா்வுதொலைந்து போகும் கவிதைகள்