மெல்பனில் ‘ திரைவிலகும்போது’ நாடக நூல் அறிமுகவிழா

Spread the love

Mr.Thiruchenthooran Book

கொழும்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் அவுஸ்திரேலியா கிளையின் ஏற்பாட்டில் மெல்பனில்  திரைவிலகும்போது நாடக நூல் அறிமுகவிழா ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை வானொலியின் புகழ்பெற்ற கலைஞர் அமரர் சாணா சண்முகநாதனின் பேரனும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் முன்னாள் செயலாளர் இரகுபதி பாலஸ்ரீதரனின் மகனுமாகிய இளம்தலைமுறை கலைஞர் எழுத்தாளர் திருச்செந்தூரனின் திரைவிலகும்போது நாடக நூலின் அறிமுகவிழா மெல்பனில் எதிர்வரும் 07-05-2016 சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு நடைபெறுகிறது.

இடம்:

Springer’s Leisure Centre – 400, Cheltenham Road, Keys borough, Victoria.

எழுத்தாளர் திரு. லெ. முருகபூபதியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு திருமதி ஜெயந்தி தனபாலனின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகும்.

சிறப்புரைகள்:  – சட்டத்தரணி திரு. சற்குணநாதன், திரு.ஐங்கரன்

நூல் நயவுரை – எழுத்தாளர் ஜே.கே. ஜெயக்குமாரன்

நடன அரங்கும் இடம்பெறும் இவ்விழாவில், திரு. இரகுபதி பாலஸ்ரீதரன் நன்றியுரையும் நூலாசிரியர் திருச்செந்தூரன் ஏற்புரையும் வழங்குவர்.

—-0—

Mr.Thirusenthooran

Series Navigationசங்ககாலப் போரில் பெண்கள்மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைகள்அன்னியமாய் ஓர் உடல்மொழி