நிறை

This entry is part 1 of 16 in the series 24 ஏப்ரல் 2016

    மனம் நிறைந்து வழிந்தது நொடிகள் தாண்டி நீளவில்லை என்பது தவிர​ நினைவில் எதுவுமில் லை   காந்தமாக​ ஒரு தேவை நினைவூட்டலாக​ ஒரு அதிகார​ உரசல் மனவெளியைத் தோண்டித் தோண்டி ஊற்று நீர் தேடும்   என் குறைகளை நீக்க​ ஒண்ணாது உள்ளே என்ன​ குறை என்றே அவரோகணம்   பொம்மலாட்டக் கயிறு மட்டுமல்ல​ பொம்மைகளும் மாற்றிக் கொள்ளும் மேடையில் தன்வயமாயில்லாமல் இருப்பை வடிவை கைகளை   நிறைவு தந்த​ புனைவுக் கவிதையின் கதையின் […]

எனது கதைகளின் கதை – 2. மனிதனுக்கு மனிதன்

This entry is part 2 of 16 in the series 24 ஏப்ரல் 2016

1956. அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில பட்டதாரி ஆசிரியர் பயிற்சி படித்துக் கொண்டிருந்தேன். அந்த ஆண்டு தீபாவளிக்காக சிதம்பரம் – விருத்தாசலம் பேருந்தில் எனது ஊருக்குச் சென்று கொண்டிருந்தேன். முன்னிரவு. பஸ் குறுக்கு ரோடில் நின்றது. மறுநாள் தீபாவளி என்பதால் பலரும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார்கள். கூட்டமாக பேருந்தில் ஏற முண்டியடித்தார்கள். நடத்துனர் அவ்வளவு பேரையும் சமாளித்து ஏற்றிக் கொண்டு விசில் கொடுத்தார். பேருந்து நகரத் தொடங்கியதும் சீட்டு போடத் துவங்கினார். ஓட்டுநர் இருக்கைக்குப் பின்னால் […]

தென் அமெரிக்காவின் ஈகுவடார் & ஜப்பான் நாடுகளில் நேர்ந்த பூதப் பூகம்பத்தால் பலர் மரணம், பேரிடர்ச் சேதாரங்கள்

This entry is part 3 of 16 in the series 24 ஏப்ரல் 2016

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா ++++++++++++ https://youtu.be/NR7nOjgRH38 https://youtu.be/8UazDAbztM0 https://youtu.be/Ywx55DC4wTs https://youtu.be/c-iZFJF8eBc http://bcove.me/i7cv1bbc https://youtu.be/YjBPJx7ehiU http://www.youtube.com/watch?feature=player_embedded&v=2tjIczIHkkA http://www.youtube.com/watch?v=_YENHB0Im2I&feature=player_embedded ++++++++++++ பூமகள் சற்று தோளசைத்தாள் ! தாமாக வீழ்ந்தன மாட மாளிகைகள் ! புதைபட்டார், பலர்  மாண்டார்; சிதைவுகளில் சிக்கினர் ! கத்தினர் ! செத்தனர் ! கடற் தட்டுகள் தடம்மாறிக் கால் உதைத்தால் உடனே சுனாமி எழும் ! பூகம்ப  ஆட்டம் நகர்த்திடும் பூகோள அச்சை ! காலம் மாறும் ! […]

நைல் நதி நாகரீகம், எகிப்தின் பிரமிக்கத் தக்க பிரமிடுகள் -2

This entry is part 4 of 16 in the series 24 ஏப்ரல் 2016

  (The Great Pyramids of Egypt) சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா   https://youtu.be/T4cA6oGwzvk https://youtu.be/Jt6ZdheNyek https://youtu.be/xo2f4IVhuPshttp://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids http://www.bing.com/videos/search?q=Pyramid+paintings%2c+statues&&view +++++++++++++++++ அற்புதம்! அற்புதம்! உலக அற்புதம்! ஒயில் மிகும் கணிதக் கட்டடம், நைல் நதி நாகரிகக் கற் கோபுரம். ஐயாயிர வயது தாண்டிய கோணகம், சதுரப் பீடம்மேல் சாய்ந்த மேடகம். புரவலர் உடல்களைப் புதைத்த பெட்டகம், சிற்பம், சின்னம் அடங்கிய களஞ்சியம். கற்பாறை அடுக்கிக் கட்டிய சிற்பகம், அற்புதம்! அற்புதம்! உலக அற்புதம்! […]

காப்பியக் காட்சிகள் 1.சீவகசிந்தாமணியில் சமயங்கள்

This entry is part 5 of 16 in the series 24 ஏப்ரல் 2016

  மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர்,                மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                         E-mail: Malar.sethu@gmail.com ஐம்​பெருங்காப்பியங்களுள் ஒன்றாகத் திகழ்வது சீவகசிந்தாமணிக் காப்பியமாகும். இக்காப்பியம் கவிச்சிறப்பாலும் கட்ட​மைப்புக் கூறுகளாலும் சிறந்து விளங்குகின்றது. இ​தைத் தமிழறிஞர்கள் பலரும் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இச்சிந்தாமணிக் காப்பியத்​தை நச்சினர்க்கினியரின் உ​ரை​யோடு பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.​வே.சாமிநா​தையர் ஆவார். சீவகசிந்தாமணியின் சிறப்பி​னை, “சிந்தாமணியின் அரு​மை வரவர எனக்கு நக்கு புலப்படலாயிற்று. ​செந்தமிழ்க் காப்பியங்களுக்கு எல்லாம் அது​வே     உ​ரையாணி என்ப​தைத் ​தெரிந்து ​கொண்​டேன்” என்று உ.​வே.சா. […]

தெறி

This entry is part 6 of 16 in the series 24 ஏப்ரல் 2016

0 சராசரி திருடன் போலீஸ் கதையை, விஜய்யின் நட்சத்திர ஆதிக்கத் துணை கொண்டு தெறிக்க விட்டிருக்கிறார் இயக்குனர் அட்லி. 0 வெர்ஷன் 1 ( விஜய் ரசிகன் ) கேரள சாலையிலே பழைய புல்லட்டுல ஜோசப் குருவில்லாவா நம்ம தலைவர் விஜய், கலைஞ்ச தலையோட ஒரு லுக் வுடறச்சயே தெரிஞ்சு போச்சுப்பா இது செமை மாஸ்னு! அப்புறம் அவுரு பொண்ணு நிவேதிதாவா பேபி நைனிகா கொஞ்சி கொஞ்சி பேசறப்ப, எனக்கு என் ஆளு நினைவுக்கு வந்துட்டே இருந்தது. […]

தொடுவானம் 117. சிங்கப்பூரில் உல்லாசம்…..

This entry is part 7 of 16 in the series 24 ஏப்ரல் 2016

  ஆர்ச்சர்ட் ரோடு சிங்கப்பூரின் முக்கிய வீதியாகும். அங்கு பெரிய அங்காடிகள் தான் காணலாம். வெளிநாட்டுச் சுற்றுப்பயணிகள் அங்கு அதிகம் வருவதுண்டு. அதற்கேற்ப பொருட்களின் விலையும் அதிகம். நான் படித்தபோது அங்கு நடந்து செல்வேனேயொழிய எந்தக் கடையிலும் நுழைந்ததில்லை. இப்போது லதா என்னை அங்கு ஓர் உயர்தர உணவகத்திற்கு இட்டுச் சென்றாள். உள்ளே நுழைந்ததும் ஜில்லென்றிருந்தது .வருங்கால டாக்டர் என்பதால் என் மதிப்பும் அவள் பார்வையில் கூடியதோ! உண்மையான காதலில் மதிப்பிற்கும் மரியாதைக்கும் என்ன வேலை? அவளைப் […]

ராஜசுந்தரராஜன் கவிதைகள் — ஒரு பார்வை

This entry is part 8 of 16 in the series 24 ஏப்ரல் 2016

  ராஜசுந்தரராஜன் ஓவியத்தில் நாட்டம் கொண்டவர். யாப்பருங்கலக் காரிகை  , தொல்கப்பியம் பயின்றவர். மீரா ,தேவதேவன் சுந்தர ராமசாமி , பிரமிள் ஆகியோரின் நட்பு  வட்டம் இவர் வளர்ச்சிக்கு உதவி இருக்கிறது. தேடல் , படிமம் , கணையாழி , சதங்கை , ழ , லயம் ஆகிய இதழ்களில் இவர் கவிதைகள் வெளிவந்துள்ளன.  ‘ உயிர்மீட்சி ‘ என்ற இத்தொகுப்பிலிருந்து இவரைப் பற்றிய பிற குறிப்புகள் ஏதும் இல்லை. இதில் சில சிறு கவிதைகளும் சில […]

கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவன்

This entry is part 9 of 16 in the series 24 ஏப்ரல் 2016

  சேயோன் யாழ்வேந்தன் கனவுகளுக்கு அர்த்தம் சொல்பவனை தேடிச்சென்று கேட்டேன், ‘நேற்றென்ன கண்டாய் உன் கனவில்? ஒரு கனவிலிருந்து இன்னொரு கனவுநோக்கிச் செல்லும் பயணத்தின் இடைவேளையில் உன்னைக் காண வரும் ஒருவன், உன் கனவுக்குப் பொருள் கேட்பான் என்றா?   கனவுபோல் வாழ்வு கலைவது கண்டு கவலை கொள்ளா ஒருவன், உன் கனவு கலைத்து உன்னைக்காண வந்த தன் கனவை சொல்லாமல் செல்வான் என்றா?   என்ன கண்டாய் உன் கனவில் சொல் முதலில்!’  

This entry is part 10 of 16 in the series 24 ஏப்ரல் 2016

அன்புடையீர்  வணக்கம் , மணல்வீடு  இலக்கிய வட்டம் எதிர்   வரும்(24-4-16) ஏப்ரல்  இருபத்தி  நான்காம்  தேதி  காலை  அண்மையில்  வெளியான ஈழ   நாவல்கள் குறித்த  விமர்சன  அமர்வு -மற்றும்  நூல் வெளியீட்டு அமர்வும் உள்ளடக்கிய இலக்கிய   நிகழ்வு  ஒன்றை   ( சேலம்  தமிழ் சங்க  நூலக மேல் மாடியில்)   ஏற்பாடு  செய்திருக்கிறது அதுசமயம்  ஆர்வலர்கள்  நிகழ்வில்  பங்கு பற்றி  சிறப்பிக்க  அன்போடு அழைக்கிறோம் . இவண் மு .ஹரிகிருஷ்ணன்