மௌனத்தின் முகம்

எப்போதும் மௌனமாய்
இருப்பதே உசிதமென
இருந்து விட்டேன்.

யாரிடமும் பேசுவதில்லை.
தவிர்க்க முடியாத
தருணங்களில்
ஓரிரு வார்த்தைகளை
தானமாய் விட்டெறிவேன்..

என் கண்களைக் கூட
பேசவிடாது
குனிந்து விடுவேன்.

வெளியே எல்லோரும்
நானிருக்குமிடம்
அமைதியின் உறைவிடமென
உற்சாகமாய்
சொல்லிச் சென்றார்கள்.

நாட்கள் செல்ல
செல்ல என் மௌன
முகத்தின் அகத்துள்
உச்சமாய் கூச்சல்..
சதா சலசலப்பும்
உச்சந்தலையை குத்தும்
உட்கலவரம்.

காதுகளற்ற
அகத்தின் முகத்துள்
கலவரக் காயங்கள்.

இரக்கமின்றி இன்னும்
இறுகி இருக்கிறது
வெளியே மௌனம்.

Series Navigationதடாகம்’ கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.ஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 7