யதார்த்தம்

Spread the love

 ரோஹி 

 

Gray grunge cracked old wall texture, concrete cement background, full frame

___________________
உண்டு விட்டு
உறங்க சென்றேன், 
உறக்கம் வந்தது, 
உறக்கத்தில்
கனவு வந்தது.. 
கனவில் காட்சிகள்
தெரிந்தன… 
மாட மாளிகைக்குள்
மலரணைப்பஞ்சணைகளும்
மயக்கம் தரும்
ஆசனங்களுமாய்.. .. 
பெருமூச்சு விட்டுத்
திரும்பிப் படுத்தேன்
அரவணைப்பாய் அருகில்
சுவர், உதிர்ந்து போன
காரைகளுடன்…. 
அங்கேயும் காட்சிகள்
தெரிந்தன…. 
மீன்வடிவிலொன்று
டிராகன் வடிவிலொன்று
ஏன், காலணி அணிந்த
அழகிய பெண்ணின்
கால்கள் வடிவிலும்தான்.. 
என் பெருமூச்சிற்கு
முடிவுரை எழுதி விட்டு
மீண்டும் திரும்பிப் படுத்தேன்
உதிர்ந்து போன காரைகளை
பூச வேண்டும் என்ற
முடிவோடு. 
Series Navigationஜேம்ஸின் மலர்ச்சாலைமீளுதல்…