யானையின் மீது சவாரி செய்யும் தேசம்

காலஃப் அல் ஹரபி

kalafஇந்தியா எனும் அதிசயமான தேசத்தில் இருந்து இதை நான் எழுதுகிறேன்….ஒரு காலத்தில் அரபிக்கடலில் பயணம் செய்பவர்களின் கனவாக இருந்த , தொலைதூரத்தில் உள்ள மும்பையில் தற்போது இருக்கிறேன்….

பல திசைகளில் இருந்தும் மக்கள் அலை அலையாக வந்து இந்த நகரத்தின் தெருக்களை நிரப்பியவண்ணம் உள்ளார்கள்..பல கண்கள் உங்களை பார்த்த‌ வண்ண‌ம் இருக்கும்…உங்க‌ளைப்பார்த்தவுடன் நீங்கள் அந்நியர் என்பதை தெரிந்துகொள்வார்கள்…. நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் என்பதை தெரிந்துகொள்ள முயற்சிப்பார்கள்…..

ஆடம்பரமான கட்டிடங்களும் , தகர கூரைவீடுகளும் அருகருகே அமைந்துள்ள‌ நகரம் மும்பை…இந்த முரண்பாட்டை பல சிந்தனாவாதிகளின் முயற்சிக்குபிறகும் விளக்கமுடியவில்லை..அதை உணரம‌ட்டுமே முடியும்..

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகளும் , நூற்றுக்கும் மேற்பட்ட மதங்களும் உள்ளன…இருந்தாலும் அனைத்து மக்களும் அமைதியாகவும் , நல்லிணக்கத்தோடும் வாழ்கிறார்கள்…இவர்க‌ள் அனைவரும் கைகோர்த்து , தையல் ஊசியில் இருந்து செவ்வாய்க்கு அனுப்பப்பட இருக்கும் ராக்கெட்வரை உருவாக்கும் ஒரு வலிமையான தேசத்தை உருவாக்கியுள்ளார்கள்….

இதைச்சொல்ல எனக்கு சற்று பொறாமையாகக்கூட இருக்கிற‌து… என்னுடைய நாட்டில் [ அரேபியா ] ஒரே மதம் , ஒரே மொழி…ஆனால் திரும்பிய பக்கமெல்லாம் படுகொலைகள்….

சகிப்புத்தன்மையைப்பற்றி உலகம் என்ன பேசினாலும் சரி….த‌ன்னகத்தே உள்ள மத , சமூக , அரசியல் ,தத்துவ வேறுபாடுகளை கடந்து செல்லும் இந்தியா , உலகிற்கே சகிப்புத்தன்மையையும் , சமாதான சகவாழ்வையும் உபதேசிக்கும் பழம்பெரும் பள்ளியாக திகழ்கிறது….
நம்மில் பெரும்பாலானோருக்கு இந்தியா என்றாலே வறுமையால் பின் தங்கிய நாடாக ஒரு சித்திரம் தோன்றும்…..அது முற்றிலும் தவறானது…. உண்மைக்குப்புற‌ம்பானது…..அந்த சித்திரம் நம்முடைய நிலைப்பாடுகளால் மதிப்பிடப்படுவது…

பெட்ரோலியம் கண்டுபிடிப்பதற்கு முன் இந்தியாவைப்பற்றிய நம்முடைய சித்திரமானது செல்வமும் , கலாச்சாரமும் நிரம்பியதாக இருந்தது…ஆனால் , நாம் பொருளாதார ரீதியாக‌ முன்னேறிய‌வுட‌ன் , இந்தியாவை வறுமையில் பின் தங்கிய நாடாக உருவகப்படுத்திக்கொண்டோம்….

நாம் சற்று சிந்தித்தால் , இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது வறுமையோ , செல்வமோ அல்ல….மாறாக‌ பல்வேறு முரண்பாடான தத்துவங்கள் இருந்தாலும் ஒன்றுக்கொண்று முரண்படாமல் இருப்பதையும் , மக்கள் அதைப்பற்றிய பயமோ, பதட்டமோ இன்றி தெருக்களில் நடமாடுவதையும் புரிந்துகொள்ள முயற்சி செய்வோம்….

ஒரு பெரும் பரிசோதனை முயற்சியாக ஒட்டுமொத்த அரேபிய மக்களையும் தூக்கிச்சென்று இந்தியாவில் விட்டுவிடுவதாக வைத்துக்கொள்வோம்….அங்கு இவர்கள் எந்த வகையிலும் தனித்து தெரிய மாட்டார்கள்… மாறாக அந்த பயமற்ற ,பிரமாண்ட மனித சமுத்திரத்தில் கலந்துவிடுவார்கள்….அரபு தேசியம் குறித்த அவர்களின் பெருமையும் , குறுங்குழுத்தீவிரவாதமும் , அந்த ஜனத்திரளில் கரைந்து
விடும்..எந்தக்காரணத்தை முன்னிட்டும் நம்முடைய சகோதர , சகோதரிகளை கொல்வதை நியாயப்படுத்த முடியாது என்ப‌தை உணர்வார்கள்…..

இந்தியா உலகின் பழம்பெரும் ஜனநாயக நாடுகளில் ஒன்று….அது எப்போதும் இன , மத வேறுபாடுகளை பெரிதாக காட்டிக்கொள்வதில்லை….இங்கு ஏழைகளை தள்ளி வைப்பதும் இல்லை…பணக்காரர்களை வெறுப்பதும் இல்லை….ஒரே சமயத்தில் ம‌ஹாத்மா காந்தி குறித்தும் , வெள்ளையர்களின் ஆட்சித்திறன் குறித்தும் பெருமிதப்படும் நாடு…

இந்திய‌ர்க‌ளுக்குள்ளே பல‌ பிரிவுகள் இருக்கலாம்..ஆனால் அவர்க‌ள் மாபெரும் ம‌னித‌ர்கள்… பொறாமை பிடித்த‌வர்களோஅல்லது ,ந‌ன்றிகெட்ட‌வர்களோ தவிர வேறுயாரும் இதை மறுக்க முடியாது….

அரேபியர்களை இந்தியாவில் விடும் கற்ப‌னையான இந்த முயற்சியின் பிரச்சினை என்னவென்றால் அவர்கள் இந்தியர்களின் மனதைக்கெடுத்து , அவர்களுக்கிடையே உள்ள‌ இன, மத வேறுபாடுகளை தூண்டிவிடுவார்கள் என்பதுதான்….இந்திய‌ர்களுக்கிடையே உள்ள , மத , இன வேறுபாடுகள் ஒருவ்ரை ஒருவர் கொல்வ‌தற்கு போதுமானது என்று எண்ண வைத்துவிடுவார்கள் நம் அரேபியர்கள்…..

Khalaf Al-Harbi , Friday, 12 June 2015 – 25 Shaban 1436 H – Saudi Gazette.

மொபெ: சான்றோன்

Series Navigationநான் அவன் தான்திரை விமர்சனம் – காக்கா முட்டை