யாரோடு உறவு

Spread the love

 

 – மனஹரன்

 

இன்றும்கூட

கூட்டமாய் வந்து 

காத்திருக்கின்றன

குருவிகளும்

புறாக்களும்

கீச்சிட்டுக்கொண்டு

 

சில அங்குமிங்கும்

பறக்கின்றன

 

இறப்பு வீட்டின் முன்

காத்திருக்கும்

தோழர்கள்போல்

இரண்டு நாளுக்கு

முன்

பலமாக வீசிய

காற்றில்

வீழ்ந்த 

90 வருட

பெரிய மரத்தின்

அடக்கத்திற்கு

Series Navigationநான்காவது கவர்சிப்பியின் செய்தி