யேல் பல் கலையில் அயான் ஹிர்ஸி அலி உரை – கருத்து சுதந்திரத்திற்கு முஸ்லிம் மாணவர்களின் எதிர்ப்பு

 ayaan
ரிக் லிஜார்டோ
மூன்று வாரங்களுக்கு முன்னால்,  யேல் முதல்வர் பீட்டர் ஸாலோவே(Peter Salovey) தனது உரையில் சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தார். வுட்வர்ட் அறிக்கை எவ்வாறு “தெளிவாகவும் விவாதத்துக்கு இடமின்றியும்” சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் தேவையை கூறுவதையும், “பல்கலை முழுக்க அப்படிப்பட்ட கருத்து வெளிப்பாடு” எவ்வளவு தேவை என்பதையும் பேசுவதை குறிப்பிட்டார்.
அந்த உன்னத குறிகோள்களை நடைமுறை படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பக்லி புராக்ராம் (Buckley Program) என்ற இளங்கலை மாணவர்கள் குழுமம் சமீபத்தில் அயான் ஹிர்ஸி அலி அவர்களை பேச அழைத்திருந்தது.  சாதனையாளரும், துனிச்சல மிக்கவருமான அயான் ஹிர்ஸி அலி ஒரு அசாதாரணமான வாழ்க்கைக்கு சொந்தக்காரர். குழந்தை பருவத்தில் பெண்குறி சிதைப்புக்கு உள்ளானவர். கட்டாய திருமணத்துக்கு உட்பட மறுத்து நெதர்லாந்துக்கு தப்பிச் சென்றவர். சில அமைப்புகள் கூறுவன போல, இந்த  நிகழ்வுகள் “துரதிர்ஷட வசமான நிகழ்வுகள் ” மட்டுமே அல்ல. . நெதர்லாந்தில் இருந்தபோது இவர் அகதிகள் முகாமில் பணி புரிந்தார். பிறகு அரசியல்வாதியாக ஆனார். மனித மான்புக்கும், பெண்கள் உரிமைக்குமாக போராடினார். இறுதியில் தனது இஸ்லாமிய நம்பிக்கையை துறந்தார். அதன் பின்னர் தனது படைப்புகள் மூலம், இஸ்லாமுக்கு எதிரான கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார். இந்த படைப்புகளால், தொடர்ந்து உயிருக்கு அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்திருக்கிறார்.
வில்லியம் எஃப் பக்லி ஜூனியர் ப்ரோக்ராமின் தலைவராக இருக்கும் நான் எவ்வாறு இந்த பிரச்னை தொடங்கியது என்பதை கூறுகிறேன். செப்டம்பர் 15ஆம் தேதி அவர் பேசுவது பற்றி  பிரசுரிக்கப்பட்டதும்,  முஸ்லீம் மாணவர்கள் அமைப்பின் மாணவர் பிரதிநிதி என்னை அணுகி சந்திக்க விரும்புவதாக தெரிவித்தார். முதல் பேச்சிலேயே, அயான் ஹிர்ஸி அலியை பேச அழைக்கக்கூடாது என்றார். நான் அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பே இல்லை என்று கூறிவிட்டேன்.(இவ்வாறு கேட்டுகொண்டதை அவர் பின்னால் மறுத்தார். பல்கலைக்கழக மேலாண்மையாளர்கள் அந்த சந்திப்பில் இருந்தார்கள்)
இந்த பிரதிநிதி ஹிர்ஸி அலியை பேச அழைக்கக்கூடாது என்றும், அப்படி அழைத்தால்,  இந்த துறையில் தகுதி உள்ள இன்னொரு  பேச்சாளரையும் அழைத்து இவரது கருத்துக்கு மறுப்பு சொல்ல அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுகொண்டார் என்பதை நான் தெளிவாகவே நினைவில் வைத்திருக்கிறேன். யேல் பல்கலைக்கழகத்துக்கு  அயான் ஹிர்ஸி அலி வருவது பற்றி சில  அமைப்புகள்(அயான் ஹிர்ஸி அலிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமைப்புகள் என்று கருதுகிறேன்) ஆர்வம் கொண்டிருக்கின்றன என்று கூறினார். அயான் ஹிர்ஸி அலி யேல் பல்கலைக்கழகத்துக்கு வருவதை பிரச்னையாக  மாற்ற இந்த அமைப்புகள் முயலும் என்று நான் அதனை புரிந்துகொண்டேன். ப்ராண்டய்ஸ் பல்கலைக்கழகம் அயான் ஹிர்ஸி அலிக்கு அளிக்கவிருந்த கௌரவ பட்டத்தை திருப்பி பெற்றுகொண்டதற்கு தான் ஆதரவளிப்பதாகவும் இவர் என்னிடம் தெரிவித்தார்.  சொல்லப்போனால், இந்த நிகழ்ச்சியைத்தான்  முதல்வர் ஸாலோவே  தனது உரையில் குறிப்பிட்டார். ( ப்ராண்டய்ஸ் பல்கலையில் அயான் ஹிர்சி அலிக்கு சிறப்பு விருது அளிக்கப் படவிருந்தது. முஸ்லிம் அமைப்புகளும், சில “இடதுசாரி” பேராசிரியர்களும், பல்கலையை நிர்ப்பந்தப் படுத்தி இதைத் தடுத்துவிட்டனர். – மொழி பெயர்ப்பாளர் குறிப்பு.)
இந்த மாணவரும், முஸ்லீம் மாணவர் அமைப்பும், இன்னும் சில 30க்கும் மேற்பட்ட அமைப்புகளும், அயான் ஹிர்ஸி அலியை பற்றி எதிர்மறையான  கருத்துக்களை பரப்பும் ஒரு பிரச்சார கடிதத்தை எழுதி, மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் அனுப்பி வைத்தனர். ஆனால், இந்த மாணவர், பல்கலைக்கழகத்தின் குறிக்கோளையும் , அதன் பொருளையும்,  சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் தேவையையும் புரிந்துகொள்ளவில்லை.
சுதந்திர கருத்து பரிமாற்றம் என்பது தன்னோடு ஒத்துப்போகிறவர்களின் கருத்துக்கு மட்டுமேயானது என்பது மூடிய மனதை காட்டுகிறது.  சுதந்திர கருத்து பரிமாற்றம் என்ற பெயரில், பேச வந்தவரின் கருத்துக்களை சரி செய்வது என்பது நகைப்புக்கிடமானது.  ஒரு மாணவர் அமைப்பு மற்றொரு மாணவர் அமைப்பு எப்படி தன் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்று எதேச்சதிகாரம் செய்வது வெட்கக்கேடானது.  துறையில் ”நிபுணர்களுக்கு” மட்டுமே அழைப்பு அனுப்பப்பட வேண்டும் என்பது அபத்தமானது. (அல் ஷார்ப்டன் என்ற மனித உரிமை போராட்டக்காரர், மரண தண்டனைக்கு எதிராக சென்ற வாரம் இதே பல்கலையில் பேசியபோது யாரும் அவருக்கு கிரிமினல் சட்டத்தில் நிபுணரில்லை என்று போராடவில்லை)
எவ்வளவுதான் விவாதத்துக்குரியதாக இருந்தாலும், தன் கருத்தை சொல்வதற்கு ஒருவருக்கு உரிமை வேண்டும் என்பதும், அதனை பாதுகாக்கவேண்டும் என்பது முக்கியமானது.
 அயான் ஹிர்ஸி அலி சொல்லும் ஒவ்வொன்றையும் ஒத்துகொள்ளாதவர்களும், அவரது குரல்  பல்கலையில் சுதந்திர கருத்து பரிமாற்றத்தை முன்னெடுக்கிறது என்பதை ஒப்புகொள்வார்கள். முதல்வர் ஸாலோவே, “நாம் புண்படுத்த வேண்டும் என்பதற்காக புண்படுத்தக்கூடாது. அக்கறையான  முற்சிந்தனையுடன் அல்லாது நாம் விவாதத்தை கிளப்பக்கூடாது” என்று கூறினார்.  அயான் ஹிர்ஸி அலியின் படைப்புக்களை நாம் பரிசோதித்தோமேயானால்,  மிகவும் தர்க்கப்பூர்வமான வாதங்களுடன்,  தன் கருத்துக்களை வைக்கிறார் என்பதையும்,  ஒப்புகொள்ளவில்லை என்றாலும், அதிர்ச்சி அளிக்க வேண்டும் என்பதற்காக அவர் பேசவில்லை என்பதையும், அவருக்கு வந்திருக்கும் பல கொலை அச்சுறு த்தல்கள் தெளிவாக காட்டுகின்றன.
அவரது எழுத்துக்கள், இந்த இஸ்லாமிய மாணவர்கள் எழுதியது போல, வெறுமே “அவதூறுகள்” அல்ல.   அதனை “வெறுப்பு பேச்சு” என்றும் வகைப்படுத்தவியலாது. மாறுபட்ட கருத்துகளை அடக்க நினைப்பவர்கள் , இந்த “வெறுப்பு பேச்சு” என்ற ஆயுதத்தை இவர்கள் பிரயோக்கிறார்கள்.  முஸ்லீம் மாணவர் அமைப்பு சொல்வது போல, கொந்தளிக்கக்கூடிய பேச்சுக்களை பேசும் மூன்றாம்தர அரசியல்வாதி அல்ல அயான் ஹிர்ஸி அலி என்பதை நடுநிலையான பார்வையாளர்கள் அறிவார்கள்.  உலகெங்கும் அடக்குமுறைக்கு ஆளான லட்சக்கணக்கான பெண்களின் மரியாதையும் மாண்புக்குமான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுத்திகொண்ட போராளி இவர் என்பதை உணர்வார்கள்.
நாங்கள் நடத்தும் நிகழ்ச்சியை நீக்க வேண்டும் அல்லது எப்படி நடத்தவேண்டும் எப்படி  மாற்றவேண்டும் என்று முஸ்லீம் மாணவர் அமைப்பு எங்களை வற்புறுத்தியது எந்த விதத்திலும் சுதந்திர கருத்து பரிமாற்றத்துக்கு ஏற்புடையது அல்ல. முஸ்லீம் மாணவர் அமைப்பு வேறு யாரையும் அழைத்து பேச வைத்தால், அதனை பக்லி புரோக்ராம் தடுக்காது. யேல் பல்கலையில் வேறு யாரேனும் எங்கள் நிகழ்ச்சியை தடை செய்ய முயன்றால், பல்கலை நிர்வாகம் எங்கள் பக்கம் நின்று “சிந்திக்க முடியாதவற்றை சிந்திக்கவும், பேச முடியாததை பேசவும்,  எதிர்க்க முடியாது என்று நம்பப் படுவதை எதிர்க்கவும்” எங்களை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்.

இதுவே அந்த நிகழ்வில் அயான் ஹிர்ஸி அலி அவர்கள் பேசியது.

Series Navigationசாகித்ய அகாதெமியின் திரையிடல் என்னும் இலக்கியச்சடங்குஅதிகார எதிர்ப்பும் ஆழ்மனநிலையும்சிறந்த நாவல்கள் ஒரு பட்டியல்- 1வாக்குமூலம்