ரிக் லிஜார்டோ மூன்று வாரங்களுக்கு முன்னால், யேல் முதல்வர் பீட்டர் ஸாலோவே(Peter Salovey) தனது உரையில் சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்திருந்தார். வுட்வர்ட் அறிக்கை எவ்வாறு “தெளிவாகவும் விவாதத்துக்கு இடமின்றியும்” சுதந்திர கருத்து பரிமாற்றத்தின் தேவையை கூறுவதையும், “பல்கலை முழுக்க அப்படிப்பட்ட கருத்து வெளிப்பாடு” எவ்வளவு தேவை என்பதையும் பேசுவதை குறிப்பிட்டார். அந்த உன்னத குறிகோள்களை நடைமுறை படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. பக்லி புராக்ராம் (Buckley Program) என்ற இளங்கலை மாணவர்கள் குழுமம் […]
நிஸிம் இசக்கியேல். இந்திய ஆங்கில இலக்கிய வரலாற்றில் மிக முக்கியமான படைப்பாளி. இவரின் Hymns in darkness என்ற புத்தகக் கவிதைகளைக் கல்லூரிக் காலத்தில் படித்திருக்கிறேன். தன்னுடைய லேட்டர் டே சாம்ஸ் என்ற கவிதை நூலுக்காக 1983 இல் சாகித அகாதமி விருது பெற்றவர். சாகித்ய அகாடமி விருது என்றால் உடனே லைப்ரரியில் அவர் சம்பந்தமான புத்தகங்களைத் தேடுவோமே. அப்படித் தேடியதில் கிடைத்த இந்தப் புத்தகத்தை வாசித்துக் குறிப்புகள் எடுத்திருந்தேன். மும்பையில் 1924 இல் பிறந்த நிஸிம் […]
விட்டல்ராவ் எழுதிய போக்கிடம் நாவலில் ஓராசிரியர் பள்ளியொன்றைப்பற்றிய சித்தரிப்பு இடம்பெறுகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரைக்குமாக மொத்தத்தில் எழுபது எண்பது பிள்ளைகள் அந்தப் பள்ளியில் படிக்கிறார்கள். பயிற்சியில்லாத ஆசிரியர்கள் ஒன்றிரண்டு மாதங்கள் வருவதும் பிறகு நின்றுவிடுவதுமாக இருந்ததால் அந்தப் பள்ளி செயல்படாத பள்ளியாகவே இருக்கிறது. அந்தச் சூழலில் சுகவனம் என்னும் இளைஞர் பயிற்சி பெற்ற ஆசிரியராக அந்தப் பள்ளிக்கு வருகிறார். மாணவமாணவிகளுக்கு பேச்சில் இருக்கிற ஆர்வம் படிப்பதிலோ எழுதுவதிலோ இல்லை. வகுப்பறை எப்போதும் […]
ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா…… உளறிக்கொட்டிக்கொண்டிருப்பேன்; உதார்விட்டுக்கொண்டிருப்பேன் ஒருபோதும் உனக்கொரு சரியான பதில் தர மாட்டேன்…. ஊ…லல்லல்லா…………ஊ…லல்லல்லா… …..ஊகூம், ஏலேலோ உய்யலாலா….. வச்சிக்கவா? வச்சிக்கவா? வச்சிக்கவா வச்சிக்கவா….? எச்சில் வழியக் கேட்பவன் இறுதியில் ‘‘உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ளே’ என்று சொல்லித் தப்பித்துவிடும் உலகில் பதிலளிக்காமல் போக்குக் காட்டுவதெல்லாம் மிக எளிது ஊ…லல்லல்லா……… ஊ….லல்லல்லா….. ஊகூம், ஏலேலோ உய்யலாலா… இணையற்ற என்னைப் […]
என். செல்வராஜ் இதுவரை பல ஆயிரம் நாவல்கள் வெளிவந்துள்ளன. அவை 15000 க்கு மேலும் இருக்கலாம். அவற்றில் சிறந்த நாவல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருக்கும். அவை எத்தனை என்பதை நாம் அறிய இதுவரை வெளிவந்துள்ள பல்வேறு எழுத்தாளர்களின் பட்டியல்களை ஒப்பிட்டுப் பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். பட்டியல் இடுவது என்பது க நா சுப்ரமணியம் காலத்தில் இருந்தே இருக்கிறது. எல்லா எழுத்தாளர்களும் பட்டியலாகத் தரவில்லை. க.நா.சுப்ரமணியம், கோவை ஞானி, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சி.மோகன், அசோகமித்திரன், […]
உலகம் தோன்றிய நாள் தொட்டே அதிகாரம் என்ற ஒரு போதை ஒரு சிலரை ஆட்டிப் படைக்கிறது. அந்த அதிகாரம் என்பது இனத்தின் பெயரால், சாதியின் பெயரால், மதத்தின் பெயரால் செலுத்தப்படும்போது ஒரு அரசியலில் புகுந்து தகுதி இல்லாதவர் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து அவர்களால் கையாளப்படும் நிலையில் பொது மக்கள் எல்லாருமே அந்த அதிகாரம் எனும் பூதத்தின் வாயில் வீழ்கிறார்கள். அதிலும் பதவி என்ற பேய் பிடித்து அதிகாரச் சவுக்கு கையில் எடுத்து சுழற்றப் படுகையில் மிகச் சாதாரணமான […]
புள்ளிகளை வளைவுக்கோடுகளால் ராஜி இணைத்துக் கொண்டிருந்தாள். வாசலில் அவள்தான் தினமும் கோலம் போடவேண்டும். வேலைப்பகிர்வு என்று எதுவுமில்லை என்றாலும் தினமும் கோலம் போடுவதை மட்டும் வேறு யாரிடமும் ராஜி கொடுத்ததில்லை. தினம் ஒரு கைவண்ணம். ஒவ்வொரு கோலமும் கண்களில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும்.பேப்பர் போடும் பையனும் சைக்கிள் பால்காரனும்ஒரு ஆர்க் அடித்து கோலத்தை மிதிக்காமல் சைக்கிளைக் கொண்டுபோவதை தினமும் கடமையாகச் செய்வார்கள். “ அற்புதமா இருக்குங்க “ அன்னியக்குரல். அதுவும் ஆண்குரல். சட்டென்று தூக்கிச் செருகியிருந்த சேலையை கீழே […]
1 இரவு மணி 10.45. ரொட்டித் துண்டில் லேசாக வெண்ணெயைத் தடவிக்கொண்டிருக்கிறார் முகம்மது. ஒரு கோப்பையில் தண்ணீரில் கலந்த பால். கொஞ்சம் ஊறியபின் சாப்பிட்டால் மெல்லும் வேலை மிச்சமாம்.. மாத்திரைகளைத் தந்துவிட்டு ஒரு தாமிரச் செம்பில் தண்ணீர் எடுத்துவந்தார் கதீஜா. தாமிரம் உடம்புக்கு நல்லதென்று கதீஜா ஊரிலிருந்து வாங்கிவந்த செம்பு அது. மகன் அப்துல்லா அவர் அறையில் தூங்கிக்கொண்டிருக்கிறார். இந்த முகம்மதைப்பற்றி தெரிந்துகொள்வோம். முப்பது ஆண்டுகளுக்கு முன் அடிவாழைக்கன்றுபோல் 6, 9, 12 வயதுகளில் மூன்று […]
21 சேதுரத்தினம் தன் மனைவியின் இறுதிச் சடங்குகளையெல்லாம் முடித்துவிட்டே தன் பணிக்குத் திரும்புவான் என்பதை அவனது அலுவலகத்தோடு தொலைப்பேசியில் தொடர்புகொண்டு அறிந்த ராமரத்தினத்துக்கு ஒரு நடை கோயமுத்தூருக்குப் போய்விட்டு வரலலாமே என்று தோன்றியது. எனவே, சேதுரத்தினம் வந்ததன் பிறகு அவனைப் பார்த்தால் போதும் என்று முதலில் தான் செய்திருந்த முடிவை மாற்றிக்கொண்டான். அவனது கோயமுத்தூர் முகவரியையும் கேட்டுப் பெற்றுக்கொண்டான். எனவே, மறு நாளே அவன் ஓட்டல் முதலாளியைப் பார்த்துத் தன் விடுப்பு பற்றிப் பேசினான்: “சார்!” […]
27.08 2014 அன்று புக் பாயின்ட் அண்ணா சாலை 160 எண் கொண்ட கட்டிடத்தில் ஆவணப்படங்கள் திரையிடல் நடந்தது இந்திய இலக்கிய ஜாம்பவான்கள் அறுவரைப்பற்றி வாழ்க்கைபடங்கள். போட்டுத்தான் காண்பித்தார்கள். சாகிதய அகாதெமியின் அழைப்பிதழ்கள் இரண்டு மூன்று சேர்ந்து கொண்டு ஒரே நபருக்கு நிகழ்ச்சி முடிந்த மறு நாள் என்கிறபடி வரும் ஆனால் இந்த முறை ரெண்டு நாட்கள் முன்னம் வந்தது. நல்ல விஷயம். அழைப்பிதழை என்றைக்கு ஏற்பாட்டாளர்கள் அஞ்சல் பெட்டியில் போட்டார்கள் என்பது விலாசத்தில் அச்சாகியிருப்பது ஒரு […]