ரீங்கார வரவேற்புகள்

Spread the love

சில பூக்கள் வண்டுகளின்

ரீங்கார வரவேற்புகளில்

பழகிவிடுகின்றன…

 

ரீங்கரிக்க மாட்டாத வண்டுகளுக்கு

தேன் பரிமாற எந்தப் பூவும்

விரும்புவதில்லை…

 

ரீங்காரங்களின் வசீகரங்களில்

தொலைந்துபோகும் வண்டுகள்

தேயும் தன் முதுகெலும்புகள் மேல்

காலம்தாழ்த்தி கவனம் கொள்கின்றன…

 

எதற்கோ பிறந்துவிட்டு

ரீங்கரிக்கவே பிறந்திருப்பதாய்

காட்சிப்பிழை காணும் வண்டுகளுள்

கூடுகளையும், கிளைகளையும் அடையும்

வண்டுகளின் பாடங்கள்

சுவாரஸ்யமானவை…

 

 

– ராம்ப்ரசாத் சென்னை (ramprasath.ram@googlemail.com)

 

Series Navigationதமிழ்ச் சிறுகதையின் திருமூலர் மௌனி