வடகிழக்கு இந்தியப் பயணம் : 10

This entry is part 6 of 10 in the series 22 மே 2022

சுப்ரபாரதிமணியன்

· உலகிலேயே அதிக மழைப்பொழிவு உள்ள இடம் சிரபுஞ்சி என்னும்சோரா அல்லது சோஹ்ரா.

· இந்தியாவின் வடக்கே சுட்டெரிக்கும் தார்பாலைவனம். கிழக்கே மிகவும் ஈரப்பதமான சிரபுஞ்சி.

ஆனால் நாங்கள் அங்கு தங்கியிருந்த மூன்று நாட்களில் மழை எதுவும் இல்லை. குடையில்லாமல் அந்த ஊருக்குள் நுழைய முடியாது என்றார்கள். ஆனால் புல்வெளிகளும் கூட காய்ந்து கிடந்தன.

புவிவெப்பயமாதலின் விளைவுதான் இங்கும் பாதிப்பாகியுள்ளதாகச் சொன்னார்கள். அது சார்ந்த விளக்கங்களுக்கு கடைசிப்பத்தியைப் பாருங்கள். உடனே அல்ல.. இக்கட்டுரையை மெதுவாகப் படித்து விட்டு ..மெதுவாகப் பாருங்கள் .

· சிரபுஞ்சி என்றால் “ஆரஞ்சுகளின் நிலம்” என்று அர்த்தமாம். மெட்ராஸ் சென்னை ஆனதுபோல, கல்கத்தா கொல்கத்தா ஆனது போல மேகாலயா அரசும் சிரபுஞ்சியை பழைய பெயரான ஷோரா என்றே மாற்றியிருக்கிறது.
சிரபுஞ்சியை ஒட்டியே வங்கதேச நாடு அமைந்துள்ளது. சிரபுஞ்சி ஷில்லாங்க்கிலிருந்து நோங்கரம் வழியாக எளிதில் அடையும் வகையில் உள்ளது.

· தற்போதைய ஆய்வுகளின் படி மௌசின்ரம் என்ற இதற்கருகிலுள்ள ஒரு இந்திய ஊரே உலகிலேயே அதிக அளவு சராசரி மழையைப் பெறும் இடமாகும். அதாவது சோரா இரண்டாவது இடத்தைப் பெறுகின்றது. எனினும் அதிகளவான ஒரு மாத மழையைப் பெற்ற இடம் என்றும் அதிகளவான ஒரு வருட மழையைப் பெற்ற இடம் என்றும் சாதனைகளைத் தொடர்ந்தும் தக்கவைத்துள்ளது. 1861ஆம் அண்டின் ஜூலையில் பெற்ற 9,300 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒருமாத மழை வீழ்ச்சியாகும். 1 ஆகஸ்து 1860 தொடக்கம் 31 ஜூலை 1861 வரை பெற்ற 26,461 mm மழைவீழ்ச்சியே உலகின் அதிகளவான ஒரு வருட மழைவீழ்ச்சியாகும்.

· 2007 ஆம் ஆண்டு, மேகாலய மாநில அரசு சிரபுஞ்சி என்ற பெயரை சோரா (Sohra) என்று மாற்றியது [1].

· 19ஆம் நூற்றாண்டு ஆங்கிலேய அரசால் “சோரா” என்ற பெயர் மருவி “சிரபுஞ்சி” ஆனது. ஆனால் அப்பகுதி மக்களால் அவ்வூர் சோரா என்றே இதுவரை அழைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

·
காண்பதற்கே பயமுறுத்தும் வகையில் மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், காண்பதிலேயே தலை சுற்றச் செய்யும் நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் முழு பரப்பையும் நன்றாக காணத்தகும் முழுமையான காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பகுதி

·

சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சியாகும். இங்கு வருடம் முழுக்கவே மலை பெய்வதால் எப்போதும் வற்றாத அருவியாகவே இது உள்ளது.இந்த வளரும் பாலம் சிரபுஞ்சியில் உள்ள லைட்க்ன்செவ் என்ற கிராமத்துக்கும் நோன்கரிட் கிராமத்துக்கும் இடையில் பாயும் நீரோடையின் குறுக்கே இரண்டு ஆலமரங்களின் விழுதுகள் இணைக்கப்பட்டு இந்த பாலம் இயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்டுகள் செல்ல செல்ல விழுதுகள் வளரும் போது இந்த பாலம் மேலும் வலுவடைகிறது.
சராசரியாக வருடத்திற்கு 180 நாட்கள் சிரபுஞ்சியில் மழை பெய்கிறது. ஜூன் முதல் செப்டம்பர் வரை. இரவில்தான் அதிக மழை பெய்வதால், பகலில் அடைமழை கூட .

·

 

நோகலிகை நீர்வீழ்ச்சி:

இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி இதுவாகும்.

அதிக அளவு நீர் வரத்து காரணமாக நீர் வீழ்ச்சி பிரம்மாண்ட மாக காட்சியளிக்கும்.
அருகில் உணவு விடுதிகளில் உள்ளூர் காஸி உணவு வகைகள், வடக்கு மற்றும் தெற்கு இந்திய உணவு வகைள் கிடைக்கின்றன.

· நோக்காலிகாய்(Nohkalikai) அருவி. உலகின் நான்காவது பெரிய அருவி. 1115 அடி உயரம் கொண்ட அருவியில் குளிக்கவெல்லாம் முடியாது. தூரத்திலிருந்து தரிசனம் மட்டுமே. ஆனால், அதுவே எல்லையில்லா ஆனந்தம் தரவல்லது. இந்த அருவிக்கும் ஒரு கதை இருக்கிறது. நிச்சயம் உண்மையாக இருக்க வாய்ப்பில்லை. ஆனால், அருவியை மறக்காமல் இருக்கவும், ஷோரா வந்தவர்கள் இந்த அருவியைப் பார்க்காமல் போகவும் விடாத கதை.

· லிகாய் என்பது அந்தப் பெண்ணின் பெயர். திருமணமாகி ஒரு குழந்தையும் அவளுக்கு இருந்திருக்கிறது. திடீரென அவள் கணவன் இறந்துவிடுகிறான். லிகாய் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறாள். புதிய கணவன் குழந்தையையும் அவளையும் நன்கு பார்த்துக்கொள்கிறான். சில நாள்களில் அவன் சுயரூபம் தெரிகிறது. அவளை வேலைக்குச் செல்லுமாறு அடிக்கிறான். அந்தப் பணத்தில் வாழ்கிறான். ஒருநாள் வேலையிலிருந்து வீடு திரும்புகிறாள்; வீட்டில் இருவரையும் காணவில்லை. ஆனால், மேஜையில் உணவு தயாராக இருந்திருக்கிறது. களைப்பாக இருந்த அவளுக்கு பசித்தது. உணவை சாப்பிடுகிறாள். சாப்பிட்டபின் வெற்றிலைப் போட கூடையை எடுக்கிறாள். உள்ளே அவள் மகளின் கைவிரல் துண்டாக கிடக்கிறது. நல்லவன் போல் நடித்தவன் குழந்தையைக் கொன்று, அதை சமைத்தும் வைத்திருக்கிறான். தன் மகளை தானே தின்றுவிட்டோமே என்ற சோகத்தில் லிகாய் அருகிலிருக்கும் அருவியில் குதித்து உயிரை விட்டிருக்கிறாள். அந்த இடம் தாம் நோக்காலிகாய் அருவி. குதிப்பது என்ற அர்த்தம். லிக்காய் குதித்த இடம்.- விகடன் வாசகர் .விஜயா இதைப்பகிர்ந்து கொண்டார்.

·

மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி:

மேகாலயாவின் கண்கவர் நீர் வீழ்ச்சிகளில் ஒன்று

ஏழு சிறிய நீர்வீழ்ச்சிகள் இணைந்து இந்த நீர்வீழ்ச்சி ஓடுகிறது.சூரியனிலிருந்து வரும் ஒளி இங்கு பிரதிபலித்து மிகவும் வித்தியாசமானதாக காட்சியளிக்கும்


கைன்ரெம் நீர்வீழ்ச்சி: கைன்ரெம் நீர்வீழ்ச்சி சோஹ்ராவின் மலைகளில் இருந்து கீழ்நோக்கிப் பாய்கிறது.அருகாமையில் பாயும் மற்ற அருவிகளை இணைத்துக் கொண்டுள்ள கைன்ரெம் நீர்வீழ்ச்சியை, மழைக்காலத்தின் போது கட்டாயம் காண வேண்டும்.

· .

நோங்சாவ்லியா:

நோங்சாவ்லியா சிரபுஞ்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளது.வட கிழக்கு இந்தியாவின் முதல் தேவாலயம் இங்குதான் அமைக்கப்பட்டது


ஈகோ பூங்கா:

·
மேகாலயா அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஈகோ பூங்காவைச் சுற்றிலும் அழகிய பச்சை மலைகளையும், சோஹ்ராவின் பள்ளத்தாக்குகளையும் கொண்டது ஆகும்.சுற்றுலாப் பயணிகள் மலைகளிலிருந்து உருவாகும் நீர்வீழ்ச்சிகளை கண்டு களிக்கும் வண்ணம், உயரமான மேட்டு நிலங்களுள் ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

 

· பூங்காவைப் போல் இங்கு வருகிறவர்கள் விவேகானந்தா மடத்திற்கும் செல்கிறார்கள் .1924-ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகாநந்தரின் சீடர்களுள் ஒருவரான கேதகி மஹாராஜ் என்பவர் காசி மக்களின் முன்னேற்றத்திற்காக, ஷெல்லா கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடமும் ஒரு சுகாதார மையமும் ஆரம்பித்தார். ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளி தொடர்ந்து காசி மலைப் பகுதி கிராமங்களில் பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது. அங்கே கல்வி நிறுவனங்கள், சுகாதார மையம், ஆஸ்ரமம் என பலவும் தொடங்கப்பட்டது. சிரபுஞ்சியில் அமைக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் 1934-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

·

· கடந்த 90 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் கல்வி, சுகாதாரம் ஆகிய பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அங்கே ஒரு சிறிய அருங்காட்சியகமும் உண்டு. அங்கே சென்று காசி பழங்குடி மக்களின் பாரம்பர்யம், அவர்களது நடவடிக்கைகள் ஆகிய பற்றிய காட்சிப்பொருட்களையும், ராமகிருஷ்ணா மிஷன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் கண்டோம். அங்கேயும் சில கடைகள் உண்டு. அப்பகுதி மக்கள் தங்கள் கைவினைப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள் என்பதை தில்லி வெங்கட் பகிர்ந்து கொண்டார்..

 

 

· சிரபுஞ்சியானது வங்கதேசத்தை நோக்கி அமைந்திருக்கக் கூடிய இந்திய எல்லையோரப் பகுதி. மேகாலயா மாநிலத்தில் எல்லையோரத்தில் அமைந்திருக்கிறது. வங்கதேசம் தரைப்பகுதியாக இருக்கும். சிரபுஞ்சியில் இருந்தே வங்கத்தேசத்து சமவெளியை பார்க்க முடியும். வங்காள விரிகுடா கடலில் இருந்து எழும் குளிர்காற்று மேகங்கள் தவழ்ந்தோடும் மேகலாயாவின் சிரபுஞ்சி மீதுதான் முதலில் மோதுகின்றன. இதனால்தான் அங்கு மழைபொழிவு உலகிலேயே அதிகமாக இருந்து வருகிறது.

· 1973-ம் ஆண்டிலிருந்து 2011-ம் ஆண்டு வரைக்கும் சிரபுஞ்சியின் சராசரி மழை அளவானது 11,820.8 மில்லி மீட்டராக இருந்து வருகிறது. இருப்பினும் 2010-ம் ஆண்டு 13,472.4 மில்லி மீட்டராக இருந்த ஆண்டு மழைப் பொழிவானது 2011-ம் ஆண்டு கணிசமாகக் குறைந்து 8732.2 ஆக பதிவாகி இருக்கிறது. இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு 9069.9 ஆக பதிவாகி இருந்திருக்கிறது.இது இப்போது இன்னும் குறைந்துள்ளதாம்

· சிரபுஞ்சியில் ஒரேநாளில் 471.7 மி.மீட்டர் மழைபெய்து உள்ளது. ஒரேநாளில் அதிகபட்ச மழைப்பொழிவு என்ற கடந்த 10 ஆண்டு சாதனையை சிரபுஞ்சி உடைத்தது.10 ஆண்டுகளுக்கு முன் நடந்தது இது

சிரபுஞ்சியில் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 12,000 மில்லி மீட்டராக பதிவாகிறது. சிரபுஞ்சி காசி மலைப்பகுதியின் தென்சரிவில் அமைந்து இயக்கை எழிலை தன்னுடனே கொண்டு உள்ளது. சிரபுஞ்சியில் கடந்த 1974-ம் ஆண்டு, 24,555 மி.மீ. பெய்ததே, ஒரு ஆண்டில் பெய்த அதிகப்பட்ச மழைப்பொழிவு ஆகும். சிரபுஞ்சி கடல்மட்டத்தில் இருந்து 1,290 மீட்டர் உயரத்திலும் மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் இருந்து சுமார் 56 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது. மேகாலயாவிலும் வழக்கத்திற்கு மாறாக அதிகப்பட்சமாக கடந்த செவ்வாய் அன்று 100.4 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகிஉள்ளது.

.

 

இவ்வளவு பெருமைகளைக் கொண்ட இந்த சிரபுஞ்சியில் இன்று வறட்சி நிலவுகிறது, இயற்கையை சீரழிப்பதால் ஏற்படும் தீயவிளைவுகளுக்கு உலகிற்கே மழைக்களஞ்சியமாக விளங்கிய ஒருகாலத்து பசுமை சிரபுஞ்சி இன்று காய்ந்துபோன வறட்சி பூமிக்கு உதாரணமாக திகழ்கின்றது, மழை இப்படி மீட்டர் கணக்கில் கொட்டும் போது மக்களின் தாகத்தை தனிப்பதற்கு ஒரு துளிகூட தண்ணீர் கிடைக்காமல் மக்கள் அலைகிறார்கள்.

இதற்கு எல்லாம் மூலகாரணம் அங்கிருந்த காடுகள் அழிக்கப்பட்டுவிட்டதுதான், முன்னொரு காலத்தில் சிரபுஞ்சியை சுற்றிலும் இருந்த மலைகளில் அடர்ந்த காடுகள் இருந்தன, அதிகமாக பெய்த மழையால் சொட்ட சொட்ட நனைந்து கொண்டிருந்தன இங்குள்ள காடுகள், காடுகளில் இயற்கையாகவே கொட்டிக்கிடந்த இலை தழைகள் சிறிது சிறிதாக பெய்யும் மழை நீரை பூமிக்குள் அனுப்பி வைத்தன, இந்த செயல் தொடர்ந்தும், பல ஆண்டுகளாக நடந்து கொண்டிருந்தன, ஆனால் சமீபகாலமாக கண்மூடித்தனமாக காட்டுமரங்கள் அளவுக்கு அதிகமாக வெட்டி சாய்க்கப்பட்டன, இலை தழைகளால் மூடப்படாமல் கட்டாந்தரையில் படிந்து கிடந்த வளமான மேல் மண் கனமாக பெய்யும் மழையால் அடித்து செல்லப்பட்டு வருகின்றன. , அதனால் சிரபுஞ்சியில் இருக்கும் மலைச்சரிவுகள் பாலைவனங்களாக காட்சி தருகின்றன, போதாகுறைக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை வார்ப்பது போல இங்குள்ள காடுகளில் சுரங்கங்கள் தோண்டுவதற்கு ஆரம்பித்திருக்கிறார்கள், இந்த சுரங்கங்களில் நிலக்கரியும், சுண்ணாம்புக் கல்லும் வெட்டி எடுக்கப்படுகின்றன, இதனால் தூசுக்கள் நிறைந்த காற்றை இங்குள்ள மக்கள் சுவாசிக்கிறார்கள், ஒடிவந்த மழைநீரை முன்பெல்லாம் தேக்கி வைப்பதற்கு நீரை சேமித்துவைக்கும் வசதிகள் இங்கு கிடையாது, கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக இங்கு வசிக்கும் மக்கள் பல செ.மீ மழை பெய்தாலும் அதை சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டதில்லை .

கையில் வெண்ணெய்யை வைத்துக்கொண்டு நெய்யுக்கு அலைந்த கதையைப் போலாகிவிட்டது சிரபுஞ்சியின் அமைப்பு. இங்குள்ள மக்களின் வாழ்க்கைமுறையும் தான். காடுகள் முன் யோசனையின்றி அழிக்கப்படுவதால் சிரபுஞ்சியில் பெய்யும் மழையும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது, காடுகள் அழிக்கப்பட்டால் பொங்கி எழும் உணர்வு நம்மில் ஒவ்வொருவரிலும் ஏற்பட வேண்டும், காடுகள் வேகமாக அழிக்கப்பட்டு வருவதால் பெய்யும் மழையின் அளவும் குறைகிறது., சிரபுஞ்சிக்கு ஏற்பட்ட இந்த அவலநிலைமை பூமி முழுவதற்குமே இன்று ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது, நாளை ஒரு நாள் சிரபுஞ்சி போல மழை என்றால் என்ன என்பதற்கு விடையாக வருங்கால சந்ததிகளுக்கு அதையும் இணையதளத்தின் வழியாய் காட்ட வேண்டிய ஒரு கேடு கெட்ட நிலை ஏற்பட்டாலும் ஏற்படலாம்.

எச்சரிக்கை, அதற்கு முன்னால் இந்த பூமியின் மொத்த இயற்கை வளங்களுக்கும் சொந்தக்காரன் என்று பெருமை பேசிக்கொள்ளும் நாம் விழித்துக்கொண்டால் பிழைத்தோம். இல்லை என்றால் அழிந்து கொண்டிருக்கும் உயிரினங்களின் பட்டியலில் பாலுட்டிகள் குடும்பத்தில் சீக்கிரத்திலேயே மற்ற உயிரினங்களோடு மனிதன் என்ற ஹோமோ சேப்பியன்ஸ் என்ற இனமும் சேர வேண்டியிருக்கும் என்று பசுமை இந்தியா அமைப்பின் ஆர்வலர்கள் கருத்துக்கள் தெரிவித்துள்ளனர்

 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவிலேயே அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அவலாஞ்சி இடத்தில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது.

. இதற்கு வளிமண்டல மேலடுக்கு தான் காரணம். கூடுதலாக காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதால், கனமழை எல்லா இடங்களிலும் கொட்டி தீர்த்துள்ளது.

நீலகிரி மாவாட்டத்தில் உள்ள அவலாஞ்சி பவானி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியாகும். இங்கு எப்போதும் பருவமழை காலங்களில் மழை அதிகமாக பெய்யும். இந்த ஆண்டு மிகவும் அதிகமாக மழை பெய்துள்ளது. பதிவாகி உள்ளது.

அதிகப்படியான மழை பெய்துள்ளதால், “தமிழகத்தின் சிரபுன்ஞ்சி”என்று ஆனது, அவலாஞ்சி. இது ஒரு நீர்ப்பிடிப்பு பகுதி அதனால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை..

· சிரபுஞ்சியில் நிலவி வரும் சீரற்ற மழைப் பொழிவானது மற்றும் மழை இல்லாமல் போவது புவிவெப்பயமாதலின் விளைவு என்ற போதும் அங்கிங்கெணாதபடி தொடரும் பசுமை வேட்டையைத் தடுத்தால்தான் சிரபுஞ்சியின் புகழைத் தக்க வைக்க முடியும் என்கின்றனர் வானியல் ஆய்வாளர்கள்.

 

· அதிக மழைப்பொழிவு ஊரிலிருந்து ஒரு சொட்டு மழையைக் கூட உணராமல், மழை பெய்து கிளம்பும் மண் வாசனையை உணராமல் திரும்ப வேண்டியிருந்தது.

00000

 

Series Navigationஒருநாள் போதுமா [மெட்டு] by பால முரளி கிருஷ்ணாதக்கயாகப் பரணி [தொடர்ச்சி]
author

சுப்ரபாரதிமணியன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *