வல்லூறுகளுக்கு மட்டுமா வானம்?

அருணா சுப்ரமணியன் 


தாழப் பறக்கும் ஊர்குருவிகள் 

உயரப் பறக்க தொடங்கின…

வல்லூறுகளோடு ஊர்குருவிகளையும் 

வரவேற்று கொண்டது வானம்…..

ஆனால் ,

ஊர்குருவியின் உயரம் சில 

வல்லூறுகளுக்கு உறுத்துவதேன் ?

உயரப் பறக்கும் ஊர்குருவிகளால் 

வல்லூறின் வலிமை குறைந்ததா என்ன ?

வல்லூறின் உயரம் நிர்ணயிக்கப் படுவது 

வல்லூறின் சிறகுகளின் வலிமையிலா ?

தாழப் பறக்கும் ஊர்குருவிகளாலா ?


உயர்ந்தே இருக்க வேண்டுமெனில் 

வல்லூறுகள் இன்னும் உயரம் பழகலாமே?

ஊர்குருவிகளை தாழத்  தள்ளி  தான் 

தன் இருப்பை உணர்த்த வேண்டுமா?


ஊர்குருவிகளை உயர்த்திய 

உன்னதமானவர்களே!

கொஞ்சம் வல்லூறுகளுக்கு சொல்லித்  தாருங்கள் ..

உயரப் பறக்கும் ஊர்குருவிகளோடு 

ஒத்து பறக்கும் வித்தையை …. 

Series Navigationவதந்திகளை பரப்புபவர்கள்!!றெக்க – விமர்சனம்