வழி தவறிய பறவை

சேயோன் யாழ்வேந்தன்

மனசுக்குள் புகுந்துவிட்ட
வழி தவறிய பறவை ஒன்று
வெளியேற மறுத்து முரண்டுபிடிக்கிறது
அதன் சிறகடிப்பு
மனப்புழுக்கத்தைக் குறைத்தாலும்
படபடப்பது சில சமயம்
பதற்றத்தைத் தருகிறது
கவிதைகளைக் கேட்டபின்பே
உறங்கச் செல்லும் அது
இரவுப் பூச்சிகளின்
ஜல்ஜல் ஒலியை
கொலுசொலியினின்றும்
வேறுபடுத்தத் தெரியாமல்
இரவெல்லாம் விழித்திருக்கிறது
இப்படியொரு பறவையை
எப்போதும் நெஞ்சில் சுமப்பதில்
சிரமமொன்றுமில்லை
எச்சங்களைத் தவிர.
seyonyazhvaendhan@gmail.com

Series Navigationநெசம்ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை