வாசிக்கும் கவிதை

அம்பல் முருகன் சுப்பராயன்

===============

நேற்று முளைத்த

வார்த்தைகளால்

சமைத்த கவிதை..

என்

மனைவிக்கு உவர்ப்பானது..

மகளுக்கு ரீங்கார இசையானது..

அண்ணனுக்கு கசப்பானது..

அண்ணிக்கு காரமானது..

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்

தாயிக்கு மணம் தந்தது..

நண்பனுக்கு இனித்தது..

தோழியின் கண்கள் கசிந்தது..

மண்ணுக்கு உரமானது..

 

Series Navigation