வால்ட் விட்மன் வசனக் கவிதை – 82 (1819-1892) 1. என் காதலியுடன் சில பொழுதுகள்

This entry is part 8 of 19 in the series 6 ஜூலை 2014

வால்ட் விட்மன் வசனக் கவிதை – 82
(1819-1892)

ஆதாமின் பிள்ளைகள் – 3
(Children of Adam)
(Sometimes with One I Love)
(Fast-Anchored Eternal O Love)

1. என் காதலியுடன் சில பொழுதுகள்

2. வேரூன்றும் நித்தியக் காதல் !

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

1. என் காதலியுடன் சில பொழுதுகள்

காதலிக்கும் ஒருத்தியுடன்
சில பொழுதுகள் நான்
கழிக்கும் போது,
சினம் அடைகிறேன்
என் காதல்
மறுக்கப் படுமோ வெனப்
பரிதவித்து.
இப்போது என் நினைப்பு
அப்படிக் காதல்
மறுக்க பட வில்லை யென்பது !
இப்படியோ இல்லை
அப்படியோ
ஈடு செய்யப் படும் என்னிச்சை
உறுதியாய் !
முன்பு ஒருத்தியை நேசித்தேன்
மூர்க்க மாக ! எனினும்
ஏற்கப் படவில்லை
எனது காதல் !
ஆயினும்
இந்தப் பாடல்கள்
எல்லாம் அந்தப் புறக்கணிப்பில்
எழுந்த வையே !

**********************

2. வேரூன்றும் நித்தியக் காதல் !

நேசிக்கும் என் காதலியே !
நித்தியக் காதல் வேரூன்றி விடும்
விரைவாய்.
மணப் பெண்ணே !
மனையாளே !
உனை நினைக்கையில்
மிகப் பெரும்
கொந்தளிப்பு உண்டாகும்
எனக்குள்ளே !
பிரிந்து போ சிதைந்து,
அல்லது
மறுபடி பிறந்து !
இறுதி நிலையில்
விளையாட்டு மெய்ப்பாட்டில்
எனக்கோர் திருப்தி !
மானிடா !
நின் நேச அரங்கில்
ஏறிய வண்ணம் மிதக்கிறேன் !
அங்கு மிங்கும்
அலையும்
என் வாழ்வுப் பயணத்தில்
பங்கு கொள் நீ !

+++++++++++++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]
3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978]

5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman

S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 3, 2014

Series Navigationகம்பனின்அரசியல்அறம்முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட​ நெடுங்கதை​) படக்கதை – 11
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *