ஜோதிர்லதா கிரிஜா 10. பேருந்தில்ஏறி அமர்ந்து வீடு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லலிதாவுக்கு நிம்மதியாகஇருந்தாலும், தன் அந்தரங்கத்தைக் கணவனின் நண்பனோடு பகிர்ந்து கொள்ள நேர்ந்துவிட்டகட்டாயம் அவளது செருக்குக்குப் பங்கம் விளைவிப்பதாக இருந்தது. ரங்கன் மிகவும்நல்லவன்தான். எனினும், தன்னைப் போன்ற கறைபடிந்த கடந்த காலம் உள்ள மனைவியை மன்னித்துஎதுவுமே நடக்காதது போல் இருந்துவிடுகிற அளவுக்குப் பெருந்தன்மையானவனா என்பதை அவளால்கணிக்க முடியவில்லை. … ஒருவனுடன்ஓடிப்போய்க் குழந்தையும் பெற்றுக்கொண்டு திரும்பியவளை அவள் பெற்றோர் அந்தக்குக்கிராமத்தில் ஏற்றுக்கொண்டதே பெரிய விஷயம்தான். ஊராரின் ஏச்சுப் […]
1989ல் பெர்லின் சுவர் வீழ்ந்து சோஷலிசம் உலகெங்கும் சரிந்து வீழ்ந்தது. 90களில் உலகமயம், தனியார்மயம் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. சர்வாதிகார அரசுகள் பல உலகெங்கும் வீழ்ந்தன. தொழில்நுட்ப புரட்சி உலகை ஆட்டி படைத்தது. இதன் தாக்கம் எப்படி இருந்தது எனில் எகிப்தில் புரட்சி நடக்கையில் எகிப்திய அரசு முதல்வேலையாக பேஸ்புக்கையும், ட்விட்டரையும் தடை செய்யும் அளவுக்கு சென்றது. சோஷியல் மீடியாவை ஆற்றலுடன் பயன்படுத்தி அமெரிக்காவில் ஒபாமாவும், இந்தியாவில் நரேந்திர மோடியும் ஆட்சிக்கு வந்தார்கள்.இப்படி உலகை குலுக்கிய […]
பவள சங்கரி “மானசா.. ஏய் மானசா.. எந்த உலகத்துல இருக்கே நீ.. எப்பப் பார்த்தாலும் காதுல பாட்டை மாட்டிக்கிட்டு, ஏதோ உலகத்துல சஞ்சாரம் பண்ணிக்கிட்டு .. என்ன பண்றே.. நான் கழுதையா கத்துறது ஏதாவது உனக்கு காதுல உழுகுதா.. இல்லைனா எப்பப் பார்த்தாலும் சிரிப்பும், கும்மாளமும் தான்” ஏனோ இந்த அம்மாக்களுக்கு மட்டும் தான் கடந்து வந்த அந்த ஸ்வீட் சிக்ஸ்டீன் மனசு மறந்தே போகுது.. எத்தனை சுகமான பருவம் அது. கண்ணுல பார்க்குறதெல்லாம் அழகு. எதோ […]
அம்பையின் காட்டிலே ஒரு மான் பற்றிப் படித்தபோது எனக்கு எங்கள் ஃபாத்திமா அம்மா சொல்லும் ஒரு கதை ஞாபகம் வந்தது. ஒரு பெரிய கானகத்தில் அருவி பொழியும் அடர்வனத்தில் ஒரு மான்குட்டி துள்ளிக்குதித்து ஆடிக்கொண்டிருந்தது. மிக அழகிய பெரிய கண்களும் புள்ளிகள் வரைந்த உடலும் கொண்ட ஓவியம் உயிர்பெற்றது போல இருந்தது அது. ஏதோ ஒரு நறுமணம் அதன் நாசியைத் துளைத்துக்கொண்டே இருந்தது. அந்த மணம் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடிக்கவே முடியவில்லை. அது துள்ளிக்குதித்துக் காடுமுழுதும் […]
திண்ணை வலையில் பல வாரங்கள் பதிப்பான சாக்ரடிஸ் மரண நாடகம் இப்போது நூலாய் வெளியிடுகிறார் “ஓசோன் புக்ஸ்” வையவன். சி. ஜெயபரதன், கனடா
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா [June 28, 2014] http://www.space.com/26390-nasa-s-flying-saucer-test-launch-and-powered-flight-video.html http://www.space.com/26143-flying-saucer-inflatable-mars-aerobrake-how-to-test-it-video.html செவ்வாய்க் கோள் செம்மண்ணில் மெதுவாய் இறங்கும் நாசா நூதனப் பறக்கும் தட்டு மாதிரிச் சோதனை செய்து முடித்தது ! சாதனை புரிந்தது முதன்முதல் சோதனைத் தள இறக்கி ! ஆறு சக்கர ஊர்தி முன்பு ஐயப் பாடுடன் இறங்கியது அதிர்ச்சி உண்டாக்கி ! இறங்காமல் போன ஊர்திகள் பல. இதுவரை ஏவப் படாத புதுமுறைப் பயணத் […]
அவசரம்! அலுவலகத்தில் வேலை பத்து விரல்களுக்கு மேல் சுமையாய் கிடக்கிறது. நான் சைக்கிளில் ஏறி அமர்ந்து, அம்மா கொடுத்த தோள் பையை வாங்கித் தோளில் மாட்டியபோது தான் பிரசில்லா [தமிழ்ச்செல்வியின் பெயர்] இந்த மூட்டையை பஸ் ஸ்டேண்ட் வரைக்கும் கொண்டு வந்து தரியா என்றாள் ஜெயலட்சுமி டீச்சர். அம்மா தலைமை ஆசிரியையாக பணியாற்றிய போது, அவளுக்குகீழ் பணியாற்றியவள். எப்பொழுதும் ஆட்டோவுக்குத்தான் போன் செய்யச் சொல்வாள், இதென்ன திடீர் என்று என்ற எண்ணம் தோன்றிய போதும் சரிக்கா […]
ரவிசந்திரன் உனக்கு எதற்குடா நாங்கள் கட்ட வேண்டும்.??? இன்கம் டாக்ஸ், வாட், சர்வீஸ் டாக்ஸ் கோடு எழுதினாயா, டெஸ்டிங் பண்ணினாயா? ஸ்கீரீன் டிசைன் செய்தாயா? சம்பளமில்லாமல் ஆபிஸில் தூங்கினாயா? பென்ஞ் துடைத்தாயா? டீமுக்கு பிட்சா, சீகரெட்டாவாது ! வாங்கினாயா? இல்லை தூங்கும் எங்கள் ப்ராஜெக்ட் மேனேஜருக்கு சொரிந்தாவது விட்டாயா? உனக்கு எதற்காட வரி , வட்டி, சர் சார்ஜ் நெஞ்சு துடிக்கிறது. கால் துரத்துக்கிறது வெளிநாட்டுக்கு ஒடு ஒடு என தடுக்கிறது அன்னையின் முனகல். ரவிசந்திரன்
சங்கர் ஒரு காகிதத்தைக் கொடுத்து ஒரு நல்ல கவிதை எழுதென்றார்கள் எது நல்ல கவிதை? யென்றேன் “நீ சொல்லாமல் சொல்லியிருக்கவேண்டும் நீ சொல்லாததும் அதிலிருக்கவேண்டும் கவிதை நில்லாமல் ஓட வேண்டும் வானம் போல் இல்லாத ஒன்றுக்கும் நிறம் தர வேண்டும் வார்த்தை ஒவ்வொன்றும் எழுந்து நிற்க வேண்டும் காதல் இருக்கவேண்டும் காமம் இருக்கவேண்டும் களப் போராளியின் வீரமிருக்க வேண்டும் நீ இருக்க வேண்டும் குறிப்பாக நானுமிருக்க வேண்டும்” எனக்கவர்கள் வேண்டுதல்கள் புரிந்தது காகிதத்தை மடித்து மடித்து . […]