வாழத் தலைப்பட்டேன்


குணா


நடுக் கடலில் நிர்க்கதி உணர்ந்தேன்

கடற்கரை ஓரம் பரவசம் கண்டேன்

மலைமுகட்டில் பாதம் நடுங்கிட

அடிவாரம் ஆனந்தம் தந்தது

பசுமை கண்டதும் புது உணர்வு வந்தது

நடுக் காட்டில் நடுக்கம் வந்தது

நகர மத்தியில் பரபரப் புணர்ந்தேன்

ஒதுக்குப் புறத்தில் உல்லாசம் தெரிந்தது

கிராம சூழலில் கிலேசம் வந்தது

சாரல் காற்றினை சில்லென்று உணர

புயலைக் கண்டு மிரண்டே போனேன்

மழையினை கண்டு சற்றே ஒதுங்கினேன்

ஆற்று நீரினில் நீந்தச் சொன்னது

வெள்ளம் வந்ததும் மிரட்சி கொண்டது

பாலையின் மத்தியில் வெறுமை தெரிந்தது

சோலை கண்டதும் குதூகலித்தது

கடற்கரை வேண்டும்

காட்டைச் சார்ந்த பசுமை வேண்டும்

கிராமம் இல்லா  நகரம் வேண்டும்

நகரம் இல்லா கிராமம் வேண்டும்

சில்லென வீசும் காற்று வேண்டும்

பாலை இல்லா சோலை வேண்டும்

வாழ்ந்து பார்த்திட காசு வேண்டும்

காசைக் காட்டிடும் ஆலை வேண்டும்

காட்டைக் காத்து ஆலை போற்றி

நீரைக் காத்து காற்றைப் போற்றி

மலையைக் குடைந்து சாலை போட்டு

குழம்படி செய்து

வாழத்தலைப்பட்டேன்

  • குணா (எ) குணசேகரன்
Series Navigationஇன்றைய அரசியல்முள்