வாழும் அர்த்தங்கள்

மஞ்சுளா

தேடும் ஆசைகளை 

குழந்தையின் கைகளைப் போல் 

ஒவ்வொன்றாய் 

பொறுக்கிக் கொண்டிருக்கிறது 

இளமை 

பொறுக்கப்பட்ட காய்களை 

சிலருக்கு நகர்த்தியும் 

சிலருக்கு வீழ்த்தியும் 

விளையாடுகிறது 

வாழ்க்கை 

சிறு பிள்ளைகளின் 

நாவில் 

ஒட்டிக்கொண்டிருக்கும் 

மிட்டாய்களை போல் 

கரைகின்றன 

பொழுதுகள் 

மீந்திருக்கும் சுவையை 

சப்புக்கொட்டியபடி 

நகர்ந்து முடிகிறது 

முதுமை 

மனிதனின்….

எல்லாமுமாய் 

அர்த்தமாகிக் கொண்டிருக்கின்றன 

அனுபவங்கள் 

                 –  மஞ்சுளா 

Series Navigationஇரவின் நிசப்தம்கவிதைகள்