விடியல் தூக்க சுகம்

ரோகிணிகனகராஜ்

—————————————-
இரையுண்டு சோர்ந்து
கிடக்கும் மலைப்பாம்பு போல்
வானம்   முழுதும்
விழுங்கிவிட்டு அமைதியாக
படுத்துக் கொள்கிறது இரவு…
 
சூரியனும் நட்சத்திரங்களும்
நிலவும்கூட தூக்க
அரக்கனின் பிடியில்
சிக்குண்டுக் கிடக்கின்றன…
 
மெல்ல பொழுதுவிடியும்போது
தன்னை எழுப்பிவிடும்
பறவைகளின்  சத்தத்திற்கு
எரிச்சலடையும்  சூரியன்
வெப்பக்கதிர்கள் வீசி தன்
எரிச்சலை காண்பிக்கிறது..
 
விடியல் தூக்கத்தின்
சுகமென்பது இயற்கைக்கும்
மனிதனுக்கும் பொதுவான
ஒன்றாகவே இருக்கிறது…
Series Navigationரிஷி (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்ஏட்டு நூல்களின் காலம் முடிகிறது….