வீடு எரிகிறது

வீடு எரிகிறது
எழுத்தோ தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கிழிந்த சிவந்த புடவை காற்றில் பறப்பது போல கூரை எரிகிறது
பின்னங்கட்டில் நீ மட்டும் பத்திரமாய்

வேப்பமரத்த்திலிருந்து விழும் கடைசி பூ போல
பூச்சி பறந்து போகிறது.

புருஷனோ போய்விட்டான்.
இருந்தாலும் எழுத்து தொடர்கிறது.
பக்கங்களுக்கு இடையே எழுத்து பரிதவிக்கிறது
நீருக்கு நடுவே அலைகிறது.
புருஷன் வயதாகி இறந்திருக்கலாம்.
உடம்பு சரியில்லாமல் போயிருந்திருக்கலாம்.
பிள்ளைகள் உன்னுடன் இருக்க
முயற்சியை கைவிட்டிருக்கலாம்.
ஆனால் எழுத்து தொடர்கிறது

நீ உருவாக்கும் ஆன்மாவை கடைத்தேற்ற
நீயே உருவாக்கிய ஆற்றில் நீந்தி
கரையேறலாம்.
படகோட்டிக்காக
முழுகியவனுக்காக
இறந்தவனுக்காக
காதலனுக்காக

Series Navigationதொடுவானம் 231.மதுரை மறை மாவடடம்.