வெண்சிறகுகள் …….

 

அருணா சுப்ரமணியன் 


என் சிறகுகளின் வெண்மை 

உங்கள் கண்களை 

கூசச்  செய்கிறதா?

எதற்காகச் சேற்றை 

தெளித்து விடப்  பார்க்கிறீர்கள்?

உங்களுக்குத்  தெரியுமா?

நீங்கள் தெளிக்கும் சேறு 

என் மேல் படாமல் காக்க 

பறக்கத் தொடங்கித் தான் 

நான் உயரம் கற்றேன்…

கறை சேர்க்க நினைத்த 

உங்களால் தான் நான் 

கரை சேர்ந்திருக்கிறேன்….

Series Navigationதேவி – விமர்சனம்நவீன விருட்சம் – நூறாவது இதழ் வெளியீட்டு விழா